அயர்லாந்து வெற்றி பெற இந்திய அணி 156 ரன்கள் இலக்கு
Share
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற இந்தியா 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீராங்கனைகளாக களத்தில் இறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஷபாலி வர்மா 24 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்தவர்களில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 13 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிகஸ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 87 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்துள்ளது. அயர்லாந்து தரப்பில், ஓர்லா ப்ரென்டெர்கேஸ்ட் 2 விக்கெட்டுகளும், கேப்டன் லாரா டிலானி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுதது 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.