செஸ் போட்டியில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ்நாடு
Share
இந்தியாவின் 80வது வீரராக கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார் சென்னையை சேர்ந்த விக்னேஷ். இந்தியாவின் மூன்றில் ஒருபங்கு கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாடு வீரர்கள் என்பது சதுரங்கத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு என்பதை அழுத்தம் திருத்தமாக மேலும் பதிவு செய்துள்ளது. இவரது மூத்த சகோதரர் விகாஷ் 2019 ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் சகோதரர்கள் என்ற சாதனையை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர். ஜெர்மனியில் பேட் ஸ்விஷெனாவில் நடந்த 24வது நோர்ட்வெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியில், ஜெர்மனியின் இல்ஜா ஸ்னைடரை விக்னேஷ் தோற்கடித்தார். இதன் மூலம் செஸ் லைவ் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளை தாண்டி இந்தியாவின் 80வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் விக்னேஷ். 2019-இல் அண்ணன் விகாஷ் கிராண்ட் மாஸ்டர் ஆனதைத் தொடர்ந்து, தற்போது அவரது தம்பி விக்னேஷும் பட்டம் வென்று, கிராண்ட் மாஸ்டர் பிரதர்ஸ் ஆகியுள்ளனர்.
சதுரங்கத்தின் உட்சபட்ச தகுதியான கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தமிழ்நாட்டை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 1987 ம் ஆண்டு வென்று இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆனார். இவருக்கு பிறகு 29 தமிழ்நாட்டு வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எட்டிப்பிடித்துள்ளனர். இந்தியா முழுவதும் 80 வீரர்கள் கிராண்ட் மாஸ்டராக தகுதியடைந்துள்ள நிலையில் 36.25 விழுக்காடு தமிழ்நாடு வீரர்கள் என்பது சதுரங்கத்தின் பிறப்பிடம் என்ற பெருமையை மேலும் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளது.
அத்துடன் சென்னையை சேர்ந்த குகேஷ் 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியர், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இந்தியாவின் 80வது வீரராக கிராண்டர் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார்
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விபரம் மாநில வாரியாக…
தமிழ்நாடு – 29
You May Like
We can’t bear to lose a 2nd child. Now Only you are the hope!
Ketto
by Taboola Sponsored Links
மேற்கு வங்காளம் – 11
மஹாராஷ்டிரா – 10
டெல்லி – 6
தெலுங்கானா – 5
கர்நாடகா – 4
ஆந்திர பிரதேசம் – 4
கேரளா – 3
குஜராத் – 2
கோவா – 2
ஒடிஷா – 2
ராஜஸ்தான் – 1
ஹரியானா – 1
மொத்தம் – 80 வீரர்கள்…
வீரர்களோடு தமிழ்நாட்டின் சாதனைகள் முடிவடைந்துவிடவில்லை வீராங்கனைகளும் தமிழ்நாட்டிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் விஜயலட்சுமி தமிழ்நாட்டைச்சேர்ந்தவர் என்பது கூடுதல் சிறப்பாகும்…