LOADING

Type to search

மலேசிய அரசியல்

கால் நூற்றாண்டுக்குப் பின் டத்தோஸ்ரீ அன்வார் மீண்டும் சமர்ப்பித்த மக்கள் நலன் பேணும் பட்ஜெட்

Share

-டான்ஸ்ரீ குமரன்

-நக்கீரன்

கோலாலம்பூர், மார்ச்25:

நாட்டு மக்கள் எதிர்பார்த்த நிதி நிலை அறிக்கையை முன்மொழிந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை வாழ்த்துவதாக இந்திய சமுதாய மூத்தத் தலைவரும் சமூக ஆர்வலருமான டான்ஸ்ரீ க.குமரன் கூறினார்.

கடந்த 1997-இல் துணைப் பிரதமராக இருந்தபோது நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த டத்தோஸ்ரீ அன்வார், அப்போது நாட்டின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

தற்பொழுது கால் நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் 2023-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை பிப்ரவரி 24-இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த பட்ஜெட், நாட்டின் பொருளாதார மீட்சியிலும் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலும் சிறப்பாக கவனம் கொண்டிருக்கிறது.

அதேவேளை, மருத்துவமனை, மருத்துவர்கள், மருந்தகம் உள்ளிட்ட மக்கள் நலவாழ்வு, பள்ளிக்கூடங்கள், கல்வி வளர்ச்சி, ஆலயங்கள், வருமானவரிக் குறைப்பு, ஊழியர் நல நிதி-இ.பி.எப். மற்றும் பணியிட பாதுகாப்பு- தொழிலாளர் பாதுகாப்பு நிதியம்- சொக்சோ மூலம் பெண்களுக்கு நிதி உதவி, இளைஞர்களுக்கான உதவி நிதி, , நோய்ச் சலுகை, வாழ்க்கைச் செலவின உதவி, வருமானம் குறைந்த மக்களின் நலன்,வேலை வாய்ப்பு போன்ற மக்கள் நலன் பேணும் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கதக்கது.

மக்கள் நலத்திட்டங்களில் அரசு அதிக அக்கறைக் கொண்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார மீட்சியுடன் கூடிய வளர்ச்சியை ஒட்டித்தான் நாட்டின் வருமானம் அமையும். அந்த வகையில், அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க நாட்டு மக்களிடையே அமைதியும் சுபீட்சமும் நிலவவேண்டியதை கவனத்தில் கொண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான குமரன் குறிப்பிட்டார்.

இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன பாகுபாடற்ற நிலையில் குடிமக்கள் அனைவரும் பயனைய வேண்டும் என்ற விழுமிய நோக்கம் கொண்டிருந்தாலும் அவற்றின் முழுப்பயனை மலேசிய இந்தியர்களும் அடைய சங்கங்களும் அமைப்புகளூம் சமுதாயத் தலைவர்களும் முன்வரவேண்டும்.

நேற்று அறிவிக்கப்பட்டுள்ள இந்நிதி நிலை அறிக்கை, அடுத்த பத்து மாதத்திற்குள் செலவிடப்படும்.

மித்ரா போன்ற அமைப்புகளின் மூலமாக சமுதாயம் சார்ந்து கொடுக்கப்படும் நிதி உதவிகளில் வெளிப்டைத்தன்மை வேண்டும். எந்தெந்த நிறுவனங்கள் எதற்காக நிதிப்பெற்றன என்ற விவரங்கள் வெளியிடப்பட்டால் தேவையற்ற குறைகூறல்களைத் தவிர்க்கமுடியும் என்றும் கருத்துரைத்துள்ள தாப்பா நாடாளுமன்ற தொகுதி மேநாள் உறுப்பினருமான டான்ஸ்ரீ க.குமரன், ஆலயங்களும் பள்ளிக்கூடங்களும் விரைந்து தங்கள் நிதி தேவைகளை அரசாங்கத்திடம் கொண்டு செல்லவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தப் புதிய வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு வாய்ப்புகளில் எவ்வறு இந்திய சமுதாயம் பயனீட்ட இயலும் என்ற விளக்கங்களை இந்தியர்களிடம் எடுத்துச் செல்வதுடன், முடியுமானானால் பொருளாதார நிபுணர்களைக் கொண்டு சிறிய ஆலோசனை-வழிகாட்டுதல் குழு அமைத்து இந்தியர்களுக்கு உதவலாம்.

பத்து மாதத்திற்குள் பயனடைய வேண்டுமானால் தும்பைவிட்டு வாலைப் பிடிக்காமல் விரைந்து முயற்சி மேற்கொண்டு பயனடைவோம் என்றும் டான்ஸ்ரீ க.குமரன் கேட்டுக்கொண்டார்.