31ம் நாள் நினைவஞ்சலி | திரு. சுப்பிரமணியம் பரமேஸ்வரன் (யாழ்ப்பாணம், அரியாலை)
Share
தோற்றம்:- 14-03-1941 மறைவு :- 01-02-2023
(முன்னாள் இலங்கைத் தூதரகச் செயலாளர் (கென்யா மற்றும் இந்தோனேசியா) மொழிபெயர்ப்பாளர் – கனடா –
Former Secretary, Sri Lankan High Commission – Kenya and Indonesia – Interpreter in Canada)
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், கனடா Markham வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்கள், பல வழிகளாலும் தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள், நண்பர்கள். எமது இல்லத்திற்கு வந்த நேரில் அனுதாபம் தெரிவித்தவர்கள், மேலும் உணவு உட்பட பல வழிகளில் உதவிகள் வழங்கியவர்கள் என அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றியைத்
சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கவனமாய்க் கற்று கல்வியில் உயர்ந்து
கனதியாய் அரச உயர் பதவிகளை எட்டியவரே
கரம்பிடித்தவரை கனிவோடு வாழ்க்கை முழுவதும்
காவிச் சென்று பெற்ற பிள்ளைகளையும் பிரியமாய் வளர்த்து
புவனத்தில் சிறந்த புருஷராய் பாசமுள்ள பிதாவாய்
பக்குவமாய் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரோடும்
இயல்பாய் பழகி இன் சொற்கள் பகிர்ந்து இறுதிவரை வாழ்ந்தீரே!
இப்போது உங்கள் முகம் காண முடியாமல் தவிக்கின்றோம் அப்பா!
தங்களைத் துணைவராய் பெற்றவர் பெருமையொடு கண்ணீர் சொரிய
தயவுள்ள தந்தையாய் அன்பைப் பெற்று வளர்ந்த பிள்ளைகளும்
எங்கினும் காணாத மனிதருள் மாணிக்கத்தை இழந்தோமே என வருந்த
எத்திக்கிலும் வாழும் நண்பர்கள் உறவினர்கள் நன் மதிப்பு கொண்டவர்கள்
ஏன் இவரை இழந்தோம் என ஏங்கி நிற்க தங்கள் இறுதிப் பயணம் நிகழ்ந்தது
நாட்கள் கழிகின்றன வேகமாய் ஆனால் நாமோ அமைதியாய் அழுகின்றோம்
அன்பை அள்ளித் தந்த ஆசைக் கணவரை அருமை அப்பாவை மாமாவை
அருமை அப்பப்பாவை காலன் கவர்ந்து சென்ற நாள் முதலாய் கலங்குகின்றோம் இங்கு.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி.
தங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
மைத்துனர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-
மனைவி / மகள் : 416 548 7477
மகன் அசோக்குமார்: (கனடா) 416 464 4777
மகன் ரஞ்சித்குமார்: ( பிரான்ஸ் ) +33646593907
சகோதரர் சண்முகலிங்கம் (கனடா) 905 840 6039