LOADING

Type to search

கனடா அரசியல்

Canadians should be cautious about foreign interference in elections. – Security officials say

Share

கனடிய தேர்தல்களில் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு தொடர்பில் கனடியர்கள் கவனத்தோடு இருக்க வேண்டும்

கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம் வேண்டுகோள்

கனடாவில் நடைபெறும் மத்திய மற்றும் மாகாண அரசுகளிற்கான தேர்தல்களின் போது வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு உள்ளனவா என்னும் விடயத்தில் கனடியர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என கனடாவின் அதி உயர் பாதுகாப்பு சேவை நிறுவனமான (சிஎஸ்ஐஎஸ் )

கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஒட்டாவாவில் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு வழங்கிய கேள்வி பதில் நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார் என அறியப்படுகின்றது.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ‘ இந்த விடயம் தொடர்பாக எவர் மீ;தும் இதுவரை குற்றவியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை எனவும் கனடாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் எவரும் வெளியேற்றப்படவில்லை. எனவும் பொது எச்சரிக்கை எதுவும் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிடப்படவில்லை. வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்த அவர் எனினும் கனடியர்கள் இந்த விடயம் தொடர்பாக கவனத்தோடும் அக்கறையோடும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவின் 2019 மற்றும் 2021 தேர்தல்களில் தலையிட சீன அரசாங்கம் முயன்றதாகவும் இந்த முயற்சிகள் பற்றிய குற்றச்சாட்டுகளை விவரிக்கும் சமீபத்திய ஊடக அறிக்கைகள் பல வெளியானபோதும் மேலும் நடவடிக்கை எடுக்கக்கோரும் வகையில் தமக்கு அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என்றும் என்பதை பாதுகாப்பு அதிகாரிகளின் உயர் மட்டக்குழு கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று வியாழக்கிழமை ஒட்டாவா மாநகரில் தெளிவுபடுத்தியது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மணிநேர சந்திப்பின் போது, கனடாவின் தேர்தல் கண்காணிப்பு குழு, கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்), மூத்த அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட RCMP அதிகாரி மற்றும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இரண்டு மூத்த அரசு ஊழியர்கள் அனைவரும் சீன அரசின் தலையீடு களின் நோக்கம் குறித்து இப்போது பரவி வரும் உரையாடல்கள் அல்லது செய்திகள் தொடர்பாக எடுத்துரைத்தனர் என அறியப்படுகின்றது
இந்த விடயம் தொடர்பாக கனடிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் அவர்கள் தெரிவிக்கையில் , ‘ தேர்தல் காலத்தில் அவற்றுள் ஊடுறுவல் செய்யும் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் இருப்பினும், கடந்த இரண்டு நாட்கள் விசாரணைகள் நடந்த போதிலும், இந்த விவகாரத்தில் பொது விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றும் , இது வரை கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தயக்கத்துடன் தொடர்புடையது,

2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களில் சீனாவின் குறிப்பிட்ட அளவு செல்வாக்கு செலுத்த முயன்றதாக குலோப் அண்ட் மெயில் மற்றும் குளோபல் நியூஸ் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டதை த் தொடர்ந்து, , குறிப்பிட்ட சில வேட்பாளர்களை பரிந்துரைக்கும் அல்லத அந்த வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் பணம் மற்றும் பரிசுப் பொருட்டகள் மற்றும் நன்கொடைகள். ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தன என்றும் தெரிவித்தார்.

இந்த விடயங்களை CSIS இன் உளவுத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகளும் மேற்கோள் காட்டின என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது