LOADING

Type to search

இலங்கை அரசியல்

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மன்னார் கள்ளியடி அ.த.க.பாடசாலை தெய்வமணி அறக்கட்டளையால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு

Share

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு,மடு கல்வி வலயத்துக்குற்பட்ட மன்னார் கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.வெலிச்சோர் தலைமையில் நேற்று(22) நடைபெற்றது.

பல வருடங்களுக்கு பிறகு வரலாற்று சாதனை படைத்து சித்தியடைந்த மாணவன் டெஸ்மன் டினுசாந்த் அவர்களுக்கு தெய்வமணி அறக்கட்டளையால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பாகவும் சிறப்பான புள்ளிகளை பெற்ற மேலும் இரு மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் அன்பளிப்பாக லண்டன் தெய்வமணி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் சாதனைக்கு உறுதுணையாக நின்ற ஆசிரியர்களுக்கும் அன்பளிப்பாக ஊக்குவிப்பு தொகை தெய்வமணி அறக்கட்டளையால் வழங்கப்பட்டது.

இவ் விழாவின் பிரதம விருந்தினராக மடு வலய கல்விப்பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி திருமதி வாசுகி சுதாகரும் ,சிறப்பு விருந்தினர்களாக மடு வலய ஆரம்ப கல்வி அதிகாரி எஸ்.செல்ரன் யூடிற், மாந்தை மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி ஜீ.அந்தோனிப்பிள்ளை மற்றும் கள்ளியடி கற்பகவிநாயகர் ஆலய தலைவர் தெய்வமணி அறக்கட்டளை நிறுவனர் வி.முத்துலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் விழாவிற்கு முன்னாள் அதிபர்கள்,கள்ளியடி முகாம் ராணுவ தளபதி மற்றும் ஊர்மக்கள் மக்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.