LOADING

Type to search

இலங்கை அரசியல்

ரணிலைப்போன்று மக்களையும் மேற்குலகம் மூளை சலவை செய்யுமா?

Share

வி.தேவராஜ்

மூத்த ஊடகவியலாளர்

 

  • ரணில் விக்ரமசிங்க மேற்குலகை வெல்லலாம். மக்களின் மனங்களை வெல்வதற்கு நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும்.
  • “சிஸ்டம் சேன்ஜ்” தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்கு வழி சமைப்பதாக அமையாது.
  • தற்போதும் தோற்றவர்கள் தமிழ் மக்களே.

 

தென்னிலங்கை அரசியலில் பேசு பொருளாக இருப்பது தேசிய நலன்”. தமிழர் அரசியலில் இருப்பது சுதந்திர தமிழ்த் தேசிய அரசியல்”சுதந்திர இலங்கையின் கடந்த 75 வருடகால இலங்கையின் அரசியல் பரப்பில் இந்த இரு அரசியல் பயணங்களும் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி இரட்டை தண்டவாளங்களாக பயணித்து வருகின்றன.

 தேசிய நலன் என்ற போர்வைக்குள் சிங்கள ஆளும் வர்க்கம் 75 வருடங்களாகபெரும்பான்மை இன ஜனநாயகஅரசியலுக்குள் நடத்தி வருகின்ற சிங்கள ஆளும் வர்க்கத்தின்ஜனநாயக முகமூடிகிழிந்து தொங்குகின்றது

75 வருடங்களுக்குப் பிறகு ஜனநாயகமே இல்லாத ஜனநாயகத்திற்குள் வாழ்ந்து வந்திருக்கின்றோம் என விழி பிதுங்கி நிற்கும் இவ்வேளையில்சிஸ்டம் சேன்ஜ்என்ற நிலையில் இருந்து பதிய தலைமைத்துவத்திற்கான பாதை நோக்கிய பயணத்தில் திசையறியாது தென்னிலங்கை உள்ளது. இந்தப் பயணத்தில் தென்னிலங்கை கடந்த வருடத்தில் வரலாறு காணாத வெற்றிகளைக் கண்டபோதும் அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது போயிற்று என்பது துரதிஸ்டமே.

சுதந்திர இலங்கையின் சிங்கள ஆளும் வர்க்கம் தொடர்ந்தும் தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக வியூகங்களை அமைத்து போராடிக் கொண்டிருக்கின்றது. இதற்கென சிங்கள ஆளும் வர்க்கம் தற்போது ரணில் விக்ரமசிங்கவின் தலைமையை ஏற்று  செயற்படுகின்றது..

ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க ஓரணியில் கைகோர்த்துப் பயணிக்கின்றனர்.

தமது இருப்புக்கு ஆபத்து வரும்போது சிங்கள ஆளும் வர்க்கம் தமக்கிடையிலான அரசியல் போட்டியை தூர விலக்கி வைத்துவிட்டு ஓரணியில் கைகோர்த்துப் பயணிப்பதை அரசியல் வர்க்க நலன் சார்ந்த மரபாகக் கொண்டுள்ளன. ஜேவிபி கிளர்ச்சியியின் போது பச்சை நீலத்துக்கப்பால் வர்க்க நலன் கொடிக்குக் கீழ் ஒன்றிணைந்து பணியாற்றியது வரலாறாகும்.

தற்போதும் சிங்கள ஆளும் வர்க்கம் வழமைபோன்று சுதாகரித்துக் கொண்டு தன்னைப் பலப்படுத்தி வருகின்றது. சிங்கள ஆளும் வர்க்கத்திற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்ரமசிங்கதேசிய நலன்என்ற போர்வையில் வழங்கிக் கொண்டும் வழி நடத்திக் கொணடும்; வருகின்றார்.அமெரிக்கா உற்பட மேற்கத்தைய சக்திகள் தமது சேவகனான ரணில் விக்ரமசிங்கவை இலங்கையின் வருங்கால சக்திமிக்க தலைவராக ஆக்குவதற்கான பாதையை செப்பனிடுகின்றன.

மேற்கத்தைய பாதையை தமக்காக திறந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஹவாட் பல்கலைக்கழக உரையின்போது இந்தியா சீனா உற்பட ஆசிய நாடுகளையும் தனது எதிர்கால இலங்கையின் பூகோள அரசியலுக்குள் சாதகமாக்கிக் கொள்ளும் போக்கினை உருவாக்கிக் கொண்டுள்ளார்.அத்துடன் இந்தியாவை தனது பாதுகாவலனாகவும் அறிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க லாவகமாக தமக்கானதும் இலங்கைக்கானதுமான பாதையை வடிவமைத்துக் கொண்டுள்ளார். இதற்கென இலங்கையின் மூலோபாய  அமைவிடத்தை மூலதனமாக்கி தனது அரசியல் பயணத்தை சர்வதேச ரீதியில் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மேற்கத்தைய போட்டி பூகோள அரசியலில் இருந்து மீட்டு வெற்றி கொள்ள காய்களை நகர்த்தியுள்ளார்.

மொத்தத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாவதற்கான அரசியல் பாதையை ரணில் விக்ரமசிங்க சர்வதேசரீதியில் அமைத்துக் கொண்டுள்ளார்.  

ஆனால் உள்நாட்டில் அவருக்கான அரசியல் பாதை சிக்கல் நிறைந்ததாகவே உள்ளது.

சிஸ்டம் சேன்ஜ‘; என்பது இன்றும் பேசுபொருளாகவே உள்ளது. அது அடையப்பட வேண்டுமென்பதில் தென்னிலங்கையின் முழுக் கவனமும் குவிந்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பு 75 வருடகால சிங்கள ஆளும் வர்க்கத்தின் அரசியல் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

  • தென்னிலங்கையில் பலமிக்க மாற்று அரசியல் இல்லை

இவர்களுக்கு மாற்றீடாக தென்னிலங்கையின் அரசியல் களத்தில் நிற்பவர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற வகையில்மாற்றத்திற்;கான கோஷத்திற்குள்அரசியல் அறுவடைக்காகக் காத்திருக்கின்றனர். அதாவது ஆடு நனைகிறது என ஓணான் அழுவது போன்றதாகவே தென்னிலங்கை அரசியல் உள்ளது.

மறுபுறம் மாற்றத்தை எதிர் பார்த்துக் காத்திருக்கும் தென்னிலங்கை  அரசியல் சக்திகளும் தலைமை இன்றி தடுமாறிக் கொண்டும் எடுப்பார் கைப் பிள்ளையாகவும் தென்னிலங்கை அரசியல் களத்தில் உள்ளன.

மக்களை வெல்வது யார்? என்பதே இன்றைய தென்னிலங்கையின் பனிப் போராக இருக்கின்றது.

தென்னிலங்கையின் எதிரணியினரது ஒற்றுமை இன்மை மக்கள் எதிர்பார்புக்கு தீனி போடும் சக்தியற்ற நிலை என்பனவற்றைச் சாதகமாக்கி ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் எதிர்க் கட்சிகளை முடிந்தவரைப் பலவீனப்படுத்தி மக்களுக்கு தம்மை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையை உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காய்களை நகர்த்தவே ரணில்ராஜபக்ஷ அணியினர் முயல்கின்றனர்.

  • ரணில் விக்ரமசிங்கவே அரசியல் மீட்பர்?

தற்போதைய அரசியல் களத்தில் ரணில் விக்ரமசிங்கவே அரசியல் மீட்பர் என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் காய்கள் நகர்த்தப்பட்டதையும் காணக் கூடியதாக இருந்தது. நாட்டில் ஏற்பட்ட மோசமான பற்றாக் குறைகள் கூட இத்தகைய பிம்பத்தை உருவாக்க மேற் கொள்ளப்பட்ட சம்பவங்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ரணில் விக்ரமசிங்க பொருளாதார மேன்மையும் சுபீட்சமுமே தனது முன்னுரிமை என கூறியுள்ளார்

ஆனால் பொருளாதார மேன்மையும்  அரசியல் ஸ்திரத்தன்மையும்  ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஒன்று இல்லாமல் மற்றொன்று நிலைத்திருக்க முடியாது

ஒரு தேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை  கண்ணீர்ப்புகை. அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் தடியடி தாக்குதல்கள் மூலம் அடைய முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை இறுதிக் கட்டத்திற்கு கொண்டு செல்வதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காட்டிய சாமர்த்தியமும் பொறுமையும் அவரது அரசியல் நடவடிக்கைகளில் காணமுடியவில்லை.   

  • அரசியல் ஸ்திரமின்மை

தற்போதையஅரசாங்கம்மக்கள்ஆணைஅற்றது.ஜனாதிபதிதேர்ந்தெடுக்கப்படவில்லை. மாறாக அவசர நடவடிக்கைகள் மூலம் நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் அவர் தனது தொகுதியை இழந்தார். அவரது கட்சியால் ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேசியப் பட்டியல் பொறிமுறையின் மூலம் அவர் தனது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனத்தையே பெற்றுக் கொடுத்தார். மார்ச் 22 அன்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒரு அறிக்கையில், தனக்கு ஆதரவு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் தன்னம்பிக்கை போதும் என்று கூறுகிறார்

யூ.என்.பி.க்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு இல்லை. ஆனால் மக்களைத் தாக்கும் கொள்கைகளை கொண்டு செல்வதற்கு ராஜபக்ச அணியினரை  நம்பியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை கிளர்ச்சியின் போது ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் ராஜபக்ச அணியினரையும் முழு அமைச்சரவையையும் வெளியேற்றியது. எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி அவசரகால சட்ட அதிகாரங்களையும் இராணுவத்தையும் பயன்படுத்தி வெகுஜன இயக்க போராட்டங்களை நசுக்கினார். மற்றும் ராஜபக்ஷக்களின் பழைய ஆட்சியை பின்கதவு வழியாக மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தார். மொத்தத்தில்முறையான ஜனநாயகம்கூட இப்போது இல்லை என்ற பொது ஜன அபிப்பிராயத்தை வேரூன்றச் செய்துவிட்டார்.

 

  • மக்கள் செல்வாக்கற்றவர்கள்

 

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல்  பேரணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, ரணில் உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் நாட்டில் எந்தளவுக்கு மக்கள் செல்வாக்கற்றவர்கள் என்பது தெரிந்தது. தேர்தல் பொதுக்கூட்டங்களில் அவர்களால் கணிசமான ஆதரவினைப் பெற முடியவில்லை. இந்த தேர்தலில் ரணில்ராஜபக்ஷ ஆளும் கட்சி அணியினர் பெரும் தோல்வியை சந்திப்பர் எனத் தெரிந்தவுடன் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மொத்தத்தில்  இந்த அணியினர் எவருமே தற்போதைக்கு ஒரு தேர்தலை எதிர் நோக்கும் நிலையில் இல்லை.

  • ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு பெரும் தோல்வி

முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான நாமல் ராஜபக்சவைபுதிய தலைவராகஉயர்த்தும் முயற்சியிலும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது.

  • ரணிலின் கொள்கைகளுக்கு மாற்று இல்லை

எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB)ஐக்கிய மக்கள் சக்தி) ஆளுங்கட்சியின் பெரும் செல்வாக்கின்மையிலிருந்து முழுமையாகப் பயனடைய முடியவில்லை. ஏனெனில் ரணிலின் கொள்கைகளுக்கு தெளிவான மாற்று அவர்களிடம் இல்லை. அவர்களின் செல்வாக்கு சற்று அதிகரித்தது 

  • ஜே.வி.பி தீர்க்கமான சவாலை முன்வைக்கவில்லை.

இந்த வெற்றிடத்தில். ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபிமக்கள் விடுதலை முன்னணி) மற்றும் அதன் கூட்டணியான என்பிபி ஆகியவை குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்ற முக்கிய சக்தியாக இருந்தன. NPP தெளிவான மாற்று இல்லை. அதன் இடது சாரி; சொல்லாட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடு காரணமாக அது பிரபலமடைந்து வருகிறது 

எந்தவொரு கொள்கைக்கும் ஜே.வி.பி தீர்க்கமான சவாலை முன்வைக்கவில்லை. இப்போது அவர்களின் நிலைப்பாடு முற்றிலும் புதிய தேர்தலுக்கான அழைப்பைச் சுற்றியே உள்ளது

இந்த அரசாங்கம் எவ்வளவு செல்வாக்கற்றது என்பதை ஜே.வி.பி உட்பட அனைவருக்கும் தெரியும். அண்மையில். ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க. ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவை வெளிப்படுத்த குறைந்தபட்சம் நூறு பேரையாவது கூட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு சவால் விடுத்தார். இவ்வளவு சிறிய, உண்மையான அணிதிரட்டலைக் கூட ரணில் விக்ரமசிங்கவால் செய்ய முடியாதுள்ளது. இந்த பலவீனம் மற்றும் வெகுஜன எழுச்சி மற்றும் கோபத்தின் மனநிலையை அறிந்திருந்தும். ஜே.வி.பி ஒரு தீர்க்கமான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு தடையாக இருந்து வருகிறது.

  • அடக்குமுறைக்குமத்தியில் மாணவர்கள் போராட்டம்

அரசுப் படைகளால் இடைவிடாத கொடூர தாக்குதல்கள் மற்றும் கைதுகள் நடைபெற்றபோதும் , பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மிருகத்தனமான அடக்குமுறை நடவடிக்கைதான் இன்னும் கூடுதலான இயக்கங்களை வளர்ச்சியடையாமல் தடுத்து நிறுத்தியுள்ளது என்பது உண்மைதான்

இருப்பினும், ரணில்ராஜபக்ஷ ஆட்சியின்  மீதான கோபமும். விரக்தியும் உச்சக்கட்டத்தை எட்டுகின்றன.

  • மீண்டும் பிச்சைபாத்திரம்?   

இதில் அரசு தவறினால், அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ள நாடு நழுவி  மீண்டும் பிச்சைபாத்திரத்தில் விழ வேண்டியிருக்கும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலகை வெல்லலாம். ஆனால் தென்னிலங்கை மக்களின் மனங்களை வெல்வதற்கு நீண்ட தூரம் பயணித்தாக வேண்டும்.

இந்த ஒரு பின்னணியிலேயே தென்னிலங்கையின் மாற்றத்தை நோக்கிய அணியினர் வடக்குக் கிழக்கு நோக்கி திரும்பியுள்ளனர்

தென்னிலங்கையின் சிஸ்டம் சேன்ஜ்” ஆட்சி மாற்றம் என்பன தமிழ் மக்களின் குறிப்பாக சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாiஷகளுக்கு வழி சமைப்பதாக அமையாது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வது சாத்தியமற்றதே. ஏனெனில் சந்திரிகா அம்மையார் காலத்தில் அம்மையார் கொண்டுவந்த தீர்வுப் பொதியை எரித்து சாம்பலாக்கினார்.அந்தச் சாம்பலுடன் தமிழ் மக்களுடன் அவர் கட்டி எழுப்ப நினைத்த நம்பிக்கையும் சாம்பலாகிவிட்டது. அண்மையில் இலங்கையின் சுதந்திர தினத்தின் 75வது கொண்டாட்டத்துடன் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறியதும் சுதந்திர தின கொண்டாட்டத்துடன் கரைந்துபோயிற்று. தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது ஹவாட் பல்கலைக்கழக உரையின்போதும் இனவிவகாரத்துக்கான தீர்வுகுறித்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துரைத்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவைப் பொருத்து அவருக்குத் தெரியும் சர்வதேச சக்திகளின் குறிப்பாக அமெரிக்காவின் தேவைகளை நிறையவே நிறைவேற்றிவிட்டார்.ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் காய் நகர்த்தல்கள் தற்போதைக்கு தமிழர் விவகாரம்குறித்து மேற்குலக சக்திகள் அடக்கி வாசிக்கும் நிலையை உருவாக்கியுள்ளன.

தற்போதும் தோற்றவர்கள் தமிழ் மக்களே!.

Email: vathevaraj@gmail.com

28th March 2023