கனடிய மத்திய அரசின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல முதலீடுகள் அறிவிக்கப்பெற்றுள்ளன.
Share
பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை
கனடிய மத்திய அரசின் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல முதலீடுகள் அறிவிக்கப்பெற்றுள்ளன என ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பெற்றுள்ளது.
அதன் விபரங்கள் பின்வருமாறு:_
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கனேடியர்களுக்குப் பணவீக்க நிவாரணமாகப் புதிய, இலக்குவைத்த உதவிகளை அரசு அறிமுகம் செய்கிறது. பணவீக்கத்தை அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக இந்தப் புதிய உதவிகள் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
- புதிய மளிகைப் பொருள் மீளளிப்பு (Grocery Rebate) மூலம் குறைந்த வருமானமும், சுமாரான வருமானமும் கொண்ட, மற்றும் உதவி அதிகம் தேவைப்படும் 11 மில்லியன் கனேடியர்களுக்கும், குடும்பங்களுக்கும் பணவீக்க நிவாரணத்தை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் வழங்குகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு மேலும் 467 டொலர் வரையான கொடுப்பனவும் , பிள்ளைகள் இல்லாத கனேடியர்களுக்கு மேலும் 234 டொலரும், முதியோருக்கு மேலும் 225 டொலரும் சராசரியாகக் கிடைக்கும்.
- தொலைபேசி ரோமிங் கட்டணங்கள், நிகழ்ச்சி மற்றும் இசைக்கச்சேரிக் கட்டணங்கள், பயணப்பொதிகளுக்கான மிக அதிகமான கட்டணங்கள், சரக்குகளுக்கான நியாயமற்ற கட்டணங்கள் போன்ற, மறைவான மேலதிக கட்டணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- குற்ற வட்டி வீதத்தைக் குறைப்பதற்குப் பரிந்துரை செய்வதன் மூலம், கொள்ளையடிக்கும் தன்மையான கடன்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் அட்டை பயன்பாட்டுக் கட்டணத்தைக் குறைப்பதுடன், கனடாவின் மிகப்பெரும் வங்கிகள் கனேடியர்களுக்கு வழங்கும் வெகுமதிப் புள்ளிகளையும் பாதுகாக்கிறது.
- மேலும் அதிக எண்ணிக்கையான, வருமானம் குறைந்த கனேடியர்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதைத் தன்னியக்கப்படுத்துவதன் மூலம் அவர்கள் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதை இலகுபடுத்தி, அவர்கள் உரிய உதவிக் கொடுப்பனவுகளைப் பெறுவதை உறுதிப்படுத்தும்.
- உயர்கல்வி மாணவர்கள் கல்விச் செலவைச் சமாளித்து, அவர்களது எதிர்பார்ப்புகளை அடைவதற்கு உதவியாக கனடா மாணவர் மானியத்தையும் (Canada Student Grants), வட்டியில்லாத கனடா மாணவர் கடனின் (Canada Student Loan) வரையறையையும் அதிகரிப்பது.
- இளம் கனேடியர்கள் அவர்களது முதல் வீட்டைக் கொள்வனவு செய்வதற்கு உதவியாக Tax-Free First Home Savings Account என்ற புதிய கணக்கை 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாந் திகதி நடைமுறைக்குக் கொண்டுவருதல்.
மத்திய அரசு கனேடியர்களுக்கு உதவியாகவும், அவர்களது வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் 2015 ஆம் ஆண்டில் இருந்து கணிசமான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இவற்றில் பின்வருவன அடங்குகின்றன:
- குறைந்த வருமானம் உள்ள மற்றும் சுமாரான வருமானம் உள்ள சுமார் 11 மில்லியன் கனேடியர்களுக்கு பணவீக்கத்தைச் சமாளிக்க ஒரு கொடுப்பனவை வழங்குதல். இரண்டு பிள்ளைகள் உள்ள தம்பதியினருக்கு 467 டொலர் வரையிலும், பிள்ளைகள் இல்லாத தனிக் கனேடியர்களுக்கு 234 டொலர் வரையிலும் கிடைக்கும்.
- மேம்படுத்தப்பட்ட கனடா பணியாளர்கள் கொடுப்பனவு (Canada Workers Benefit) மூலமாக, இவ்வாண்டில் குடும்பங்களுக்கு 2,461 டொலர் வரையிலும், பிள்ளைகள் இல்லாத தனிக் கனேடியர்களுக்கு 1,428 டொலர் வரையிலும் கிடைக்கும்.
- தகுதியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்குப் பல் மருத்துவ செலவினத்தை ஈடுசெய்வதற்காக இரண்டு வருட காலத்தில் 1,300 டொலர் வரையான, நேரடியான, வரி செலுத்தத் தேவையற்ற கொடுப்பனவு.
- வாடகைச் செலவினத்தால் சிரமப்படும் வருமானம் குறைந்தோருக்கு வரி செலுத்தத் தேவையற்ற 500 டொலர் கொடுப்பனவு.
- 75 வயதை அடைந்த முதியோருக்கான Old Age Security (OAS) கொடுப்பனவில் செய்யப்படும் பத்துச் சதவீத அதிகரிப்புக் காரணமாக, முழு ஒய்வூதியம் பெறுவோருக்கு முதல் வருடத்தில் மேலதிகமாக 800 டொலர் உதவி கிடைக்கும்.
- வரி செலுத்தத் தேவையற்ற கனடா சிறுவர் கொடுப்பனவு (Canada Child Benefit) வருடாந்தம் சுமார் 3.5 மில்லியன் குடும்பங்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் ஆறு வயதிற்கு உட்பட்ட ஒரு பிள்ளைக்கு 6,997 டொலர் வரையும், ஆறு வயது முதல் 17 வயது வரை 5,903 டொலர் வரையும் கிடைக்கும்.
- மாசுக்களுக்குச் சமஷ்டி மட்டத்தில் விலை விதித்து, காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடும் அதேவேளை, கனேடியர்களின் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கக் கூடியதாக்குதல். இது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களில் பத்தில் எட்டுக் கனேடியர்கள் அவர்களுக்கு ஏற்படும் செலவை விடவும் அதிகமான பணத்தை மீளப் பெறுவார்கள்.
- நடுத்தர வருமானம் உள்ள கனேடியர்கள் மீதான வரிகளைக் குறைக்கும் அதேவேளை, செல்வந்தர்களில் முதல் ஒரு சதவீதமானோர் மீது வரிகளை அதிகரித்தல்.
- நாடு தழுவிய இளமைக் கல்வி மற்றும் சிறுவர் பாராமரிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் ஆறு மாகாணங்களும் பிராந்தியங்களும், எதிர்பார்க்கப்பட்டதற்கு மிகவும் முன்பாகவே, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆந் திகதியளவில் நாளாந்தம் 10 டொலர் அல்லது அதனிலும் குறைந்த செலவில் சிறுவர் பராமரிப்பை வழங்கவுள்ளன. ஏனைய மாகாணங்களிலும், பிராந்தியங்களிலும் நாளாந்தம் 10 டொலருக்குச் சிறுவர் பராமரிப்பு என்ற இலக்கு 2026 ஆம் ஆண்டில் எட்டப்படும்.
இவற்றுக்கு மேலதிகமாக, கனடா சிறுவர் கொடுப்பனவு (Canada Child Benefit), கனடா ஓய்வூதிய திட்டம் (Canada Pension Plan), முதியோருக்கான Old Age Security, மற்றும் Guaranteed Income Supplement, ஆகிய அனைத்தும் பணவீக்கத்துக்கு ஏற்றவாறாக அதிகரிக்கப்படும்.
சுகாதாரப் பராமரிப்பு:
கனேடியர்கள், அவர்களுக்கு உரித்துடைய பராமரிப்பைப் பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக எமது சுகாதாரப் பராமரிப்பு முறையைப் பலப்படுத்துவதற்காகத் தேவைப்படும் ஓர் அவசர முதலீட்டை 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் செய்கிறது.
கனடாவில் உள்ள அனைவருக்குமான பொதுச் சுகாதாரப் பராமரிப்பு முறையைப் பலப்படுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் 198.3 பில்லியன் டொலரை வழங்குகிறது. இது, தேங்கிப்போயுள்ள பணிகளைக் குறைப்பதற்கும், குடும்ப சுகாதார சேவையைப் பெறுவதை விரிவாக்குவதற்கும், கனேடியர்கள் எதிர்பார்ப்பதும், அவர்களுக்கு உரித்துடையதுமான உயர் தரத்திலான பராமரிப்பை உரிய நேரத்தில் பெறுவதை மாகாணங்களும் பிராந்தியங்களும் வழங்குவதை உறுதி செய்வதற்கும் பயன்படும்.
புதிய கனடா சுகாதாரப் பராமரிப்புக்கான கொடுப்பனவாக மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் புதிதாக வழங்கப்படும் 46.2 பில்லியன் டொலர், ஒவ்வொரு
;தினதும் பிராந்தியத்தினதும் தேவைக்கு ஏற்றவாறாக வடிவமைக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமான உதவிகள், தனிநபர் உதவிப் பணியாளர்களுக்கான (Personal Support Worker) ஊதிய உதவி, மற்றும் ஒரு பிராந்திய சுகாதார முதலீட்டு நிதியம் ஆகியன இதில் அடங்குகின்றன.
இந்த நிதி, கனேடியர்களுக்குக் கிடைக்கும் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்தி, வளப்படுத்தப் பயன்படுத்தப்படுவதுடன், மாகாணங்களினதும், பிராந்தியங்களினதும் திட்டமிடப்பட்ட சுகாதாரப் பராமரிப்புச் செலவினத்துக்குப் பயன்படுத்தப்படலாகாது.
இவற்றுக்கு மேலதிகமாகச் சமஷ்டி அரசு, பழங்குடிகளின் சுகாதார முன்னுரிமைகளுக்கு, பழங்குடிப் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டுப் பத்து வருட காலப்பகுதிக்கு மேலதிகமாக 2 பில்லியன் டொலரை வழங்கும். இந்தப் பணம் பழங்குடிகள் சுகாதார சமத்துவ நிதியத்தின் ஊடாக, தேவைகளைப் பொறுத்துப் பகிரப்படும்.
பல் மருத்துவம்:
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேவையுள்ள கனேடியர்களுக்குப் பல் மருத்துவம் வழங்குவதற்காக, மாற்றத்தை ஏற்படுத்தும் முதலீடாக, புதிய கனடா பல் மருத்துவ திட்டத்தைச் (Canadian Dental Care Plan) சமஷ்டி அரசு முன்னெடுக்கிறது.
கனடா பல் மருத்துவ திட்டத்தை (Canadian Dental Care Plan) நடைமுறைப்படுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், 2023-24 முதல் ஐந்து வருட காலப்பகுதிக்கு 13 பில்லியன் டொலரை ஹெல்த் கனடாவுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், காப்புறுதி அற்ற, 90,000 டொலரிலும் குறைவான வருடாந்த குடும்ப வருமானம் பெறும் கனேடியர்களுக்குப் பல் மருத்துவம் வழங்கப்படும். வருடாந்த குடும்ப வருமானம் 70,000 டொலரிலும் குறைவான கனேடியர்கள் பகுதிக் கொடுப்பனவைச் (co-pay) செய்யவேண்டிய தேவை இருக்காது. இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் செயற்பட ஆரம்பிக்கும். மூன்றாந் தரப்பு சேவை வழங்குனரின் ஆதரவுடன், ஹெல்த் கனடாவால் இந்தத் திட்டம் நிர்வகிக்கப்படும்.
கனேடியர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் பல் மருத்துவத்தைப் பெறுவதை, எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளில் வசிப்பது, அல்லது குறைபாடு ஒன்றின் காரணமாக சிறப்புச் சிகிச்சை தேவைப்படுவது போன்ற செலவினம் தவிர்ந்த ஏனைய விடயங்களும் தடுக்கக் கூடும்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், வாய்ச் சுகாதார அணுகல் நிதியம் ஒன்றை அமைப்பதற்காக ஹெல்த் கனடாவுக்கு 2025-25 முதல் மூன்று ஆண்டுகளுக்கு 250 மில்லியன் டொலரும், அதன் பின்னர் 75 மில்லியன் டொலர் வீதமும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியம், நலிவடைந்த மக்கள் குழுக்கள் மத்தியில் வாய்ச் சுகாதாரப் பராமரிப்பில் உள்ள இடைவெளிகளை நீக்குவதற்கும், கிராமப்புறங்களிலும், எளிதில் சென்றடைய முடியாத சமூகங்களில் வசிப்போர் உட்பட்டோர் சிகிச்சை பெறுவதற்கு நிலவும் தடைகளை நீக்குவதற்கும் குறிப்பான உதவிகளை வழங்குவதன் மூலம் கனடா பல் மருத்துவ திட்டத்திற்கு மேலதிக உதவியாக அமையும்.
கருக்கலைப்பு, மற்றும் ஏனைய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரச் சேவைகளையும் பெறுதல் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிதியத்தைப் புதுப்பிப்பதற்கு ஹெல்த் கனடாவுக்கு 2024-25 இல் இருந்து மூன்று வருட காலத்திற்கு 36 மில்லியன் டொலரை வழங்க 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பையும், ஏனைய பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பராமரிப்புத் தொடர்பான தகவல்களையும், சேவைகளையும் பெறுவதை இந்த நிதியம் மேலும் எளிதாக்கும்.
குற்றங்களுக்கு எதிரான போராட்டமும் உயிர்களைக் காப்பதும்: ஓபியொய்ட் (Opioid) நெருக்கடிக்கு எதிரான நடவடிக்கை
புதுப்பிக்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான கனேடிய மூலோபாயத்திற்கு (Canadian Drugs and Substances Strategy) ஆதரவளிப்பதற்காக 2023-24 முதலான ஐந்து வருட காலத்திற்கு 359.2 மில்லியன் டொலரையும், தொடரும் கொடுப்பனவாக 5.7 மில்லியன் டொலரையும், எஞ்சிய கடனீட்டுச் செலவாக 1.3 மில்லியன் டொலரையும் வழங்குதற்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கனேடியர்களின் உயிர்களைக் காத்து, அவர்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அரசின் செயற்பாட்டுக்கு இது வழிகாட்டும். இந்த நிதி, சமூகங்களுக்கான உதவிகள், தடுப்புச் செயற்திட்டங்கள், மேற்பார்வையுடன் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் நிலையங்கள் மற்றம் போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும்.
தற்கொலை தடுப்புக்கான 988 தொலைபேசி இலக்கத்தைச் செயற்படுத்தல் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 988 இலக்கத்தைச் செயற்படுத்துவதற்கு உதவியாக கனேடிய பொதுச் சுகாதார அமைப்புக்கு 2023-24 முதலான மூன்று ஆண்டுகளில் 158.4 மில்லியன் டொலர் வழங்கப்படும். 2023 நொவம்பர் 30 ஆந் திகதியின் பின்னர், கனேடியர்கள் 988 இலக்கத்திற்கு எந்ந நேரமும் அழைப்பெடுத்தோ, குறுஞ்செய்தி அனுப்பியோ தரமானதும், செயற்திறனுள்ளதும், உடனடியானதுமான தற்கொலைத் தடுப்பு மற்றும் மனநல நெருக்கடிக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.