LOADING

Type to search

கனடா அரசியல்

‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் அவர்களின் அகவை எழுபது பெருவிழாவில் மண்டபத்தை நிறைந்து மகிழ்வித்தபல்துறை சார்ந்த தமிழன்பர்கள்

Share

தாயகத்தில் எழுத்தாளனாகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்ற ஆரம்பித்து கனடாவிலும் பத்திரிகை. வானொலி. தொலைக் காட்சி மற்றும் நாடகம் எழுத்து கவிதை என பல துறைகளில் கால்பதித்து தன் கலைப் பணியைத் தொடர்பவர் ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் ஆவார். அன்னாரின் அகவை எழுபது பெருவிழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ ஜேசி விழா மண்பத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மொன்றியால் வாழ் கலைஞரும் அறிவிப்பாளருமான அர்யுன் அவர்கள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அழகாகத் தொகுத்து வழங்கினார். அன்றைய தினம் மண்டபத்தை நிறைந்து விழாவை அழகுறச் செய்த பல்துறை சார்ந்த தமிழன்பர்கள் நண்பர்கள் மற்றும் யுகம் வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு விழா நாயகனான கணபதி ரவீந்திரன் அவர்களை வாழ்த்தியும் போற்றியும் சென்றார்கள்.

ஆரம்பத்தில் மலர் மாலை அணிவிக்கப்பெற்ற ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் அவர்களின் நண்பர்கள் புடைசூழ மேடைக்கு அழைத்து வரப்பெற்றார். தொடர்ந்து மேடைக்கு அழைக்கப்பெற்ற திருவாளர்கள் சாமி அப்பாத்துரை. ‘உதயன்’ லோகேந்திரலிங்கம். வானொலி நிலையங்களின் அதிபர்கள் இளையபாரதி. நடா ராஜ்குமார். வர்த்தகப் பிரமுகர் கிருஸ்ணகோபால். கலாநிதி பார்வதி கந்தசாமி உட்பட சில பிரமுகர்களின் உரை இடம்பெற்றது.’கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் அவர்களின் பல்வேறு துறைகள் சார்ந்த ஆற்றலையும் சாதனைகளையும் எடுத்துரைத்து புகழாரம் சூட்டினர்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்த்துக்கள் ஆகியனவும் இடம்பெற்றன.
யுகம் வானொலிக் கலைஞர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் ஊடகவியலாளர்கள் ஆகியோர் ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் அவர்களை கௌரவித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
கனடா உதயன் சார்பிலும் ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் அவர்களின் சேவைகள் தொடர்பாக பிரதம ஆசிரியர் உரையாற்றி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.