யாழ் பல்கலைக் கழகத்தில் சிவாஜி கணேசன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மேடையில் கனடா ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் சினிமாவும்’ நூல் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு வழங்கப்பெற்றது
Share
கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சிவாஜி கணேசன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மேடையில் கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் எழுதிய ‘சிவாஜி கணேசனும் சினிமாவும்’ என்னும் நூல் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு வழங்கப்பெற்றது
மேற்படி விழாவிற்கு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் உயர்திரு ஶ்ரீசற்குணராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் கலந்து கொள்வதற்காக விசேடமாக யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பெற்ற சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பெற்றது.
தமிழ்நாட்டு அறிஞர் ஒருவர் எழுதிய ‘சிவாஜி கணேசன்’ என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்கு சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக கனடா வாழ் வீணைமைந்தன் மற்றும் ‘ரொறன்ரோ மனித நேயக் குரல் ‘அமைப்பின் பொருளாளர் மரியாம்பிள்ளை மரியராசா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அப்போது அந்த வரலாற்று நூலைப் பெற்றுக்கொள்வதற்காக மேடைக்கு அழைக்கப்பெற்ற கனடா எழுத்தாளர் வீணை மைந்தன் அவர்கள் தான் எழுதிய ‘சிவாஜி கணேசனும் சினிமாவும்’ என்னும் நூலின் பிரதியை மிகுந்த மரியாதையுடன் அவரிடம் கையளித்தார்.
இந்த நூலானது கனடா உதயன் பத்திரிகையில் வாரா வாரம் ஒரு வருடத்திற்கு மேலாக பிரசுரமாகிய கட்டுரைகளின் தொகுப்பு என்பதும் விரைவில் இந்த நூல் கனடாவில் வெளியிடப்படும் என்பது இங்கு குறிப்பி;டத்தக்கது.