பஞ்சாப்பை பதற வைத்த நால்வர் கூட்டணி – லக்னோ அணி 257 ரன்கள் குவிப்பு
Share
16 ஆவது ஐபில் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய 38-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 12 ரன்களிலேயே அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கைல் மேயர்ஸ் 4 சிக்சர்களை விளாசி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 54 ரன்களுக்கு விக்கெட்டாக லக்னோ ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆயுஷ் பதானியும், மார்கஸ் ஸ்டோனிஸூம் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்க்க, பதானியை 43 ரன்களில் லியாம் லிவிங்ஸ்டன் வெளியேற்றினார். பேட்ஸ்மேன்கள் விக்கெட்டானாலும் 40 ரன்களுக்கு குறையாமல் சேர்த்தது அணிக்கு பலமாக அமைந்தது. மார்கஸ் ஸ்டோனிஸ் பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட ரசிகர்கள் குதூகலித்தனர். இனியும் வேலைக்காகாது என முடிவெடுத்த சாம் கரன், மார்கஸ் ஸ்டோனிஸை 72 ரன்களில் வெளியேற்றி பஞ்சாப் அணிக்கு ஆசுவாசத்தை கொடுத்தார். நிலைத்து ஆடிய நிக்கோலஸ் பூரனும் 45 ரன்களில் பெவிலியன் திரும்ப நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த லக்னோ 257 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச 2வது ஸ்கோர் என்ற சாதனையையும் படைத்துள்ளது லக்னோ; முதல் இடத்தில் 263 ரன்களுடன் பெங்களூரு அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.