LOADING

Type to search

கனடா அரசியல்

WE NEED A SMART, EXPERIENCED MAYOR AND THIS LEADER HAS TO BE A WOMAN” – Journalist Pamela Jeffery

Share

“ரொறன்ரோ மாநகரில் புதிய மேயராக தெரிவு செய்யப்படவுள்ளவர் அவசியம் ஒரு அனுபவமுள்ள பெண் அரசியல்வாதியாக இருக்க வேண்டும்”

ரொறன்ரோ பத்திரிகையாளர் பெமிலா ஜெவ்ரி-

எதிர்வரும் யூன் 26ம் திகதி நடைபெறவுள்ள கனடாவின் ரொறன்ரோ மாநகரின் மேயராக அவசியம் ஒரு அனுபவமுள்ளள பெண் அரசியல்வாதியே தெரிவு செய்யப்பட வேண்டும்'” என்று தனது பக்கத்தில் எழுதியுள்ளார் ரொறன்ரொவிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேட்டின் பத்தி எழுத்தாளர் பத்திரிகையாளர் பெமிலா ஜெவ்ரி அவர்கள்.

ரொறன்ரோ மாநகர மேயராக முன்னர் பதவி வகித்த ஜோன் ரோரி அவர்கள் ஒரு குற்றச் சாட்டு தொடர்பாக தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது ரொறன்ரோ நகரசபைக்கான புதிய மேயரைத் தெரிவு செய்யும் தேர்தல் யூன் மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் பலர் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்கள்.

அவர்களில் முன்னாள் ஒன்றாரியோ மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் அரசில் அமைச்சராகப் பதவி வகித்தவருமான Mitzie Hunter மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினரும் மறைந்த மத்திய என்டிபி கட்;சியின் தலைவர் ஜெய்க் லேய்ரன் அவர்களின் துணைவியுமான Olivia Chow- ஒலிவியா சோ மற்றும் Ana Bailaoஆகிய அனுபவமிக்க பெண்கள் போட்;டியிடுகின்றனர். இவர்களோடு பல ஆண் வேட்பாளர்களும் போட்டியாளர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தேர்தல் பிரச்சாரங்கள் ‘சூடு” பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ரொறன்ரோ பத்திரிகையொன்றில் பத்தி எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ள கட்டுரையானது பலரை திரும்பிப் பார்க்கவும் சிந்திக்கவும் தூண்டியுள்ளது என்றால் அது மிகையாகாது

அவர் தனது பத்தியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் ‘நடைபெறவுள்ள ரொறன்ரோ நகரத்திற்கான மேயர் தேர்தலில் போட்டியில் குதித்துள்ள வேட்பாளர்களில் ஒரு அனுபவமுள்ள பெண் அரசியல்வாதி ஒருவரே வெற்றி பெற்று மேயர் பதவியில் அமர வேண்டும். இந்த வகையில் கனடாவில் உள்ள 62 பெண் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழும் Mitzie Hunter அவர்களே ரொறன்ரோ மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்குக் காரணம் அவர் ஒருவரே தற்போதைய வேட்பாளர்களில் மாற்றங்களைக் கொண்டுவரக் கூடியவர் என்ற நம்பிக்கைகளை விதைத்துள்ளார்.

அத்துடன் Mitzie Hunter அவர்கள் மாகாண பாராளுமன்றத்தின் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். மாகாண அமைச்சராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். மேலும் Mitzie Hunter அவர்கள் ரொறன்ரோ தலைமை நிர்வாக அதிகாரியாக ரொறன்ரோ சமூக வீடமைப்பு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நடுத்தர மற்றும் அடி மட்ட மக்களின் துன்பங்களை நன்கு புரிந்து கொண்டவர். மேலும் ரொறன்ரோ மாநகர சபையில் இம்முறையாவது பெண் ஒருவரின் தலைமைத்துவக் குரல் ஒலிக்க வேண்டும்.’ அதற்காக அவர்களையே ரொறன்ரோ வாழ் மக்கள் தங்கள் மேயராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்” இவ்வாறு மேற்படி பத்திரிகையாளர் Pamela Jeffery எழுதியுள்ளார்