வீரபுரம் மணிவாசாகர் மகா வித்தியாலய திறன் வகுப்பறை திறப்பு விழா 2023.05.11
Share
வீரபுரம் மணிவாசகர் மகாவித்தியாலயம் பாடசாலையானது தரம் 01 தொடக்கம் 13 வரையான சுமார் 350 மாணவர்களைக் கொண்ட ஓர் பாடசாலையாகும் இது வீரபுரம், அரசடிக்குளம், பெரியகுளம்,சின்னத்தம்பனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர் பெறும்பான்பையானோர் நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமைகளால் பாதிக்கப்பட்டவராகவும் வறுமை நிலைக்குட்பட்ட கூலித் தொழிலாளர்களாகவும் காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையில் பாடசாலையின் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் நவீன கற்பித்தல் சாதனங்களின் பயன்பாடு ஓர் எட்டாக் கனியாக இருந்த வேளையில் பாடசாலை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய எமது ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான திறன் வகுப்பறை ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு திரு.செல்வராஜா சுகுமார் (லன்டன்), திரு.மயில்வாகனம் ஸ்ரீதரன் (லன்டன்) ஆகியோருடன் அனைத்துலக மருத்தவு நல அமைப்பு (IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன் ஆகியோர்களின் நிதி அனுசரனையுடன் இவ் உதவி சாத்தியமானது.
இன்றைய தினம் 2023.05.11 திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்த திரு.அருளானந்தம் ஞானேஸ்வரன் (தலைவர் ஓமந்தை,சேமமடு-பழைய மாணவர் சங்கம்) திரு. திரு.தர்மதேவன் .யசோதரன் (IMHO) இணைப்பாளர் வவுனியா,மன்னார்) ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த திறன் பலகை எமது பாடசாலை சமூகத்திற்கு கிடைத்த பாரிய வரப்பிரசாதமாகும் இதனூடாக எமது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடு வினைத்திறனாக அமையும் என்பதுடன் நவீன உலகின் சவால்களை எதிர் கொள்ள கிராமப்புற மாணவர்களுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்பததையிட்டு பாடசாலையின் அதிபர் என்ற வகையில் பெறுமிதம் கொள்கின்றேன்.