தலை மன்னாரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.
Share
மன்னார் நிருபர்
(18-05-2023)
தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலயத்தில் பங்குத்தந்தை மார்க்கஸ் அடிகளார் தலைமையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை(18) காலை இடம்பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.குறித்த திருப்பலியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இத்திருப்பலியில் இறந்துபோன மக்களின் ஆத்ம சாந்திக்காக மக்கள் இறைவனிடம் வேண்டுதல் செய்தனர்.தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான இடத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த சுடரை அருட்தந்தை ஏற்றி வைத்தார்.
அத்துடன் இறை மக்களும் முள்ளிவாய்க்கால் நினைவு பதாதையில் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வில் கிராம மக்கள் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், பெரியவர்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது இறந்து போன உறவுகளை நினைத்து பாடல்கள் பாடப்பட்டு உணர்வு பூர்வமான தமது அஞ்சலியை மக்கள் செலுத்தினர்.இறுதியில் மக்களை நினைவுகூரும் கஞ்சி வழங்கப்பட்டது.
இதனை அனைவரும் உண்டு மக்களின் துயர நிகழ்வில் உணர்வுபூர்வமாக பங்குகொண்டனர். இந்நிகழ்வை கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஒழுங்கு படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.