CANADA ஸ்காபுறோவில் இயங்கிவரும் ‘நம் தாயகம்’ விற்பனை நிறுவனத்திற்கு சென்ற நண்பர்கள்
Share
கனடா -ஸ்காபுறோவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘நம் தாயகம்’ வர்த்தக நிறுவனம் ‘ தாயக உணர்வுடனும் தாய் மண்ணின் சுவையுடனும் என்ற இலட்சியத்தோடு செயற்பட்டு வருகின்றது.
இந்த நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்து வன்னி பிராந்தியத்தில் இருந்து பெறப்படுகின்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
போரினால் கணவர்மாரை இழந்த கைம்பெண்கள் மற்றும் ஆதுரவற்றோர் வ்னனியில் இயங்கும் இந்த ‘நம் தாயகம்’உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றுகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மார்க்கம்-ஸரீல்ஸ் சந்திப்புக்கு அருகில் இயங்கிவரும் இந்த ‘நம் தாயகம்’ விற்பனை நிறுவனத்திற்கு சில நாட்;களுக்கு முன்னர் சென்ற சமூக ஆர்வலர் விசு கணபதிப்பிள்ளை மற்றும் தென் புலோலியூர் கிருஸ்ணலிங்கம் ஆகியோர் நிறுவனத்தின் பங்காளர்களைச் சந்தித்து உரையாடினார்கள்.
இந்த நிறுவனத்தில் விற்பனையாகும் பொருட்கள் அனைத்தும் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டவை என்பது நம்பகத்தன்மையுள்ள விடயமாகும்.