LOADING

Type to search

கனடா அரசியல்

The Tamil Literary Garden- Canada hosts ‘The Lifetime Achievement Awards presenting Event’ on 04-06-2023

Share

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு நடத்தும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா-2022

தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும் விருது பெறுகின்றார்.

கனடாில் பிரபல எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களும் அவரது குழுவினரும் இணைந்துள்ள இலக்கிய அமைப்பான’ தமிழ் இலக்கியத் தோட்டம்’ நடத்தும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா-2022 நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 04-06-2023 அன்று மாலை 5.00 மணிக்கு கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள The Estate Banquet Hall விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் நன்கு அறியப்பெற்ற இலக்கியவாதிகளான பாவண்ணன். லு. முருகபூபதி;. வேல்முருகன் இளங்கோ. சாம்ராஜ். சுகிர்தராணி. கனடா வாழ் எழுத்தாளர் வ.ந. கிரிதரன் ஆகியோரும் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும் விருது பெறுகின்றார்கள்

தமக்குரிய விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் நாளை கனடா வருகின்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய’இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் நூலுக்கு விருது வழங்கப்பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது

அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் மற்றும் கலை இலக்கிய நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் இந்த விழாவில் கலந்து சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விழாவின் பிரதம விருந்தினராக Thomas Hitoshi Pruiksma (Writer, Translator, Teacher, Performer and author of ‘The Kural0கலந்து சிறப்பிக்கின்றார்.