இந்தியர்களைப் போல் ஒன்றுபடுங்கள் – யாழ்ப்பாணத்தில் புத்தி ஜீவிகளிடம் மைத்திரி வேண்டுகோள்
Share
இந்தியா பல இன, மொழி, மத மக்கள் வாழும் நாடாக உள்ள நிலையில் இந்தியர்கள் என்ற நீதியில் அனைவரும் ஒன்றுபடுவதைப் போல இலங்கையிலும் இலங்கையர் என்ற நீதியில் அனைவரும் ஒற்றுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 1ம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்திஜீவிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவர் அங்கு தெரிவிக்கையில்,
30 வருட யுத்தம் வடக்கையும் தெற்கையும் பிரித்த நிலையில் யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடக்கும் நிலையில் எமக்குள் ஒற்றுமைப்படுதல் இல்லாமல் காணப்படுகிறது.
இதற்கு இந்தியா நல்ல உதாரணம் இந்தியாவில் பல இன மொழி மத க்கள் பின்பற்றப்படும் நாடாக உள்ள நிலையில் அவர்கள் இந்தியர்கள் என்ற நீதியில் ஒற்றுமைப்படுவார்கள்.
எமது நாடும் பல இன மொழி மதங்களை கொண்ட நாடாக காணப்படுகின்ற நிலையில் எமக்குள் இலங்கையர் என்ற நீதியில் ஒற்றுமைப்பட முடியாமல் உள்ளது.
அதற்கு கடந்த கால கசப்பான அனுபவங்கள் ஆட்சியாளர்களின் கடும் போக்கு சிந்தனைகள் எம்மை ஒற்றுமைப்படுத்தலில் இருந்து விலக்கி வைத்துள்ளது.
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற காலத்தில் வட மாகாணத்துக்கு 21 தடவைகள் வருகை தந்த ஜனாதிபதி நான்தான்.
ஏன் நான் அதிக தடவை வந்தேன் என்பதற்கு காரணம் இருக்கிறது வடக்கையும் தெற்கையும் சமதளத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
வடக்கில் வாழும் மக்களின் அரசியல் அபிவிருத்தி அன்றாட பிரச்சனைகளைகளை தீர்வு கண்டு அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் சம அந்தசுள்ளவர்களாக பயணிக்க வேண்டும் என விரும்பினேன்.
அதற்காக வடக்கு அபிவிருத்தி நிதியத்தை ஆரம்பித்து அதனூடாக பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்கினேன்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மயிலிட்டித் துறைமுகம் போன்ற அபிவிருத்தி பணிகளை துரிதகதியில் செயல்படுத்தினோம்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு செல்ல முடியாமல் அகதி முகங்களில் தங்கி இருந்த நிலையில் எனது ஆட்சி காலத்திலேயே சுமார் 2500 ஏக்கர் காணிகளை விடுவித்தேன்.
அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காகன புதிய அரசியல் அமைப்பின் தேவை கருதி புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆரம்பித்தேன் துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் காரணமாக முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
நான் வடக்கு மக்களை மறக்கவில்லை அவர்களில் 80 வீதமானவர்கள் என்னை ஜனாதிபதி ஆக்குவதற்கு அர்ப்பணித்தவர்கள் என்பதை புத்திஜீவிகளான உங்கள் மத்தியில் கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
புத்திஜீவிகள் ஆகிய உங்களிடம் நான் ஒன்றை கூற விரும்புகிறேன் எமது அயல் நாடான இந்திய நாட்டிலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் இந்தியர்கள் என்ற நீதியில் அவர்கள் ஒற்றுமைப்படுவதைப் போல நாமும் இலங்கையர் என்ற நீதியில் ஒற்றுமைப்படுவோமாயின் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.