LOADING

Type to search

இலங்கை அரசியல்

புதிய சட்ட திருத்தம் தொடர்பில் சந்திக்க தயார் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Share

திருத்தப்படவுள்ள புதிய மீன் பிடி சட்டங்கள் தொடர்பில் மீனவ சங்கங்கள் கலந்துரையாட விரும்பினால் அமைச்சில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

திங்கட்கிழமை யாழ் பாடி விருந்தினர் விடுதியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் எழுப்பிய கேள்வி ஒன்று தொடர்பில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கடற்தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் புதிய மீன்பிடிச் சட்டத்தால் வடக்கு மீனவர்களின் பிரச்சனை தீர்க்கப்படுமா என கேள்வி எழுப்பியதுடன் புதிய சட்டங்கள் தொடர்பில் சாதக பாதக தன்மைகள் தொடர்பில் முற்கூட்டியே அமைச்சருடன் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இலங்கையில் உள்ள 15 கடற் தொழில் மாவட்டங்களிலும் புதிய மீன்பிடிச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் போது புதிய சட்டத்தில் மீனவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் வருகைதரும் அதிகாரிகளுடன் தெளிவாகக் கலந்துரையாடலாம்.

இல்லாவிட்டால் அமைச்சில் கலந்துரையாட விரும்பினால் அதற்குரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.