LOADING

Type to search

இலங்கை அரசியல்

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது – அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்

Share

13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்கள் தற்போது இடம்பெற்று வருகிறன. 13-ஆம் திருத்தச் சட்டம் என்பது ஓர் அரசியல் தீர்வு அல்ல.

அரசியல் தீர்வை பெறாமல் அரசியலை மேற்கொள்ள முடியாது என்பதே தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு.

தற்போது உள்ள அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் தம்மால் இயலாத நிலையிலையே 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார்கள். ஆனால் 13 ஆம் தேதி சட்டம் என்பது இந்தியாவும் இலங்கையும் எடுத்துக்கொண்ட தீர்வேதவிர அது தமிழ் மக்களுக்கான தீர்வு அல்ல. எனவே 13ம் திருத்தச் சட்டம் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது என குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் குடிசானன மதிப்பீடு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். தேர்தல் நடத்துவதற்கு பணம் இல்லாத அரசாங்கம் எவ்வாறு குடிசன மதிப்புட்டினை மேற்கொள்ளும் இதற்கு அதிகளவிலான பணம் செலவாகப்படுகிறது எனவே இவ்வாறான வேலைத் திட்டங்கள் இப்போது மக்களுக்கு தேவைதானா என்கிற கேள்வி எம்மிடையே எழுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.