LOADING

Type to search

இலங்கை அரசியல்

வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Share

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் 16 ம் திகதிகளில் தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் இணைப்பாளர் பாபு தெரிவித்தார் .

யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியவேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இம் மாதம் 15 மற்றும் 16 ம் திகதிகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் ஏற்பாட்டில் “வடக்கின் ஔிமயம்” எனும் தொனிப்பொருளில் “Global fair 2023” நடைபெறவுள்ளது.

இரு தினங்களாக நடைபெறவுள்ள இந் நிகழ்ச்சியில் இரவு 7 மணிமுதல் 12 மணிவரை இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது. அனைத்து பார்வையாளர்களுக்குமான அனுமதி இலவசமாக் காணப்படும்.

இதில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பான ஆலோசனைகள் , சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் பயன்பெறலாம்.

வெளிநாட்டு தொழில்களின் போதான பிரச்சினைக்கு தீர்வு காணும் அமைச்சு , ஊழியர் சேமலாப , நம்பிக்கை நிதியப் பிரச்சினைக்கான தீர்வுகளுடன் தொடர்பான அமைச்சு , தொழிற்துறை சம்பந்தமான வாய்ப்புக்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் தொடர்பான அமைச்சு மற்றும் பயிற்சிக்கான அமைப்புக்கள் இத் தொழில் வாய்ப்பு சந்தையில் பங்கெடுக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.