யுத்த காலப்பகுதியில் கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மாணவர்கள் செய்த சிறப்பான செயல்
Share
“வாழும் போதே வாழ்த்துவோம் ” என்ற தொனிப்பொருளில்
2009 காலப்பகுதிக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிளிநொச்சி வேரவில் இந்து மஹா வித்தியாலயத்தில் கற்பித்த அதிபர் ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டும், கெளரவிப்பும், ஒன்று கூடலும் அப்பாடசாலையில் கல்வி கற்ற 2006 க.பொ.த சாதாரண தர மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வெகு விமரிசையாக அண்மையில் கொண்டாடப்பட்டது.
“வாழும் போதே வாழ்த்துவோம் ” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர். சிவகொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ். தேசிய கல்வியற்கல்லாரி பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களும், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளரும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளருமாகிய வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களும், கௌரவ விருந்தினராக கோட்டக்கல்வி அதிகாரி திரு நா. கணேஸ்வரநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இதன்பொழுது ஆசிரியர்கள் மாணவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மாணவர்களும் ஆசிரியர்களால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.