LOADING

Type to search

கனடா அரசியல்

“அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் மொழிபெயர்ப்புகள் தான் உலகெங்கிலும் திருக்குறளை உண்மையாகப் போற்றவும் பயனடையவும் உதவின”

Share

கனடாவின் Prince Edward தீவில் உள்ள Bedeque என்னும் நகரத்தில் கடந்த சனிக்கிழமை “அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் திருவருட்சிலையை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றிய சிவன் இளங்கோ தெரிவிப்பு

மேற்படி சிலை திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வாழத்து தெரிவிப்பு

“அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் மொழிபெயர்ப்புகள் தான் உலகெங்கிலும் திருக்குறளை உண்மையாகப் போற்றவும் பயனடையவும் உதவின என்றால் அது மிகையாகாது. அத்துடன் அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்கள் தமிழ் மொழியையும் , அதன் செழுமையையும் தனது மொழிபெயர்ப்பின் மூலம் உலகுக்குக் கொண்டு வந்த முதல் அறிஞர் என்றும் குறிப்பிடலாம். ,அதற்காக நாம் எப்போதும் அவருக்கு நன்றியடையவர்களாக இருக்கிறோம்.

சிறந்த தமிழறிஞரான அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றிய அளவுகடந்த பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது நினைவுச்சின்னத்தை உத்தியோகபூர்வமாகத் திறப்பதற்கு இந்த வரலாற்று நாளில் இங்கு வந்திருப்பது எமக்கு முழுமையான கௌரவத்தையும் மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் தருகின்றது என்றும் நாம் நம்புகின்றோம்’

இவ்வாறு. கனடாவின் Prince Edward தீவில் உள்ள Bedeque என்னும் நகரத்தில் கடந்த சனிக்கிழமை “அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் திருவருட்சிலையை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றிய சிவன் இளங்கோ தெரிவித்தார்.

மேற்படி சிலை திறப்பு விழாவிற்கு ரொறன்ரோ மாநகரிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் இங்கிருந்து பயணித்து அங்கு கலந்து கொண்டனர். ஒரு வாரப்பயணமாக அங்கு சென்றிருந்த எம்மவர்கள் எமது மொழிக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு மேல்நாட்டு அறிஞருக்கு சிலை நிறுவிய பெருமையோடு ரொறன்ரோ திரும்பியுள்ளனர்.

மேற்படி வைபவத்தில் அங்கு உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் முன்னாள் தலைவரும் மேற்படி சிலை அமைப்புக் குழுவின் தலைவருமான அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு தெரிவித்தார்.

வள்ளுவன் தந்த திருக்குறளை உலகுக்கு ஆங்கிலத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய G.U. போப் அவர்களுக்கு நன்றி மறவாத கனேடியத் தமிழர்கள் அவர் பிறந்த இடமான Prince Edward தீவில் உள்ள Bedeque என்னும் இடத்திலே இன்று சனிக்கிழமை காலை அறிஞரின் திருவருட்சிலையை திறந்து வைக்கிறார்கள். இதற்காக Toronto உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் வந்து குவிந்திருக்கிறார்கள்.

இன்றைய வரலாற்று நிகழ்விற்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இன்று எங்களுடன் இணைந்திருக்க நேரம் ஒதுக்கியதற்கு தங்கள் அனைவருக்கும் நன்றி.

உலகளவில் 90 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் தமிழ் மொழி உலகின் செம்மொழிகளில் ஒன்றாகும். தமிழ் மிகவும் பழமையானது மற்றும் சொல்லின் சிறந்த மொழிகளில் ஒன்றாகும். தமிழ் மொழி தமிழ் இன அடையாளத்தின் ஒருங்கிணைந்த ஒரு முக்கியமானதாகும், மேலும் இது எங்கள் தாய் மொழி என்று தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ்ச் செம்மொழி உரையான திருக்குறள் தனிமனிதனின் ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளைப் பற்றி பேசுகிறது மற்றும் அதில் உள்ள ஞானம் மிகுந்த வார்த்தைகள் அது எழுதப்பட்டபோது இருந்ததைப் போலவே இன்றும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடியதாகவே விளங்குகின்றது.

குறளில் அனைத்துமே அடங்கியிருக்கிறது, இல்லாதது எதுவுமே இல்லை என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானது . இதுவரையும் திருக்குறள் 40 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது மற்றும் இது உலகளாவிய நெறிமுறை புத்தகமாக பரவலாக கருதப்படுகிறது. லியோ டால்ஸ்டாய் மற்றும் மகாத்மா காந்தி உட்பட பல முக்கிய பிரமுகர்கள் திருக்குறளை விரும்பிப் படித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் மொழிபெயர்ப்புகள் தான் திருக்குறளை உண்மையாகப் போற்றவும் பயனடையவும் உலகெங்கிலும் உதவியது. ஜி.யு.போப் தமிழ் மொழியை, அதன் செழுமையைத் தனது மொழிபெயர்ப்பின் மூலம் உலகுக்குக் கொண்டு வந்த முதல் அறிஞர், அதற்காக நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்கள், நாலடியார் மற்றும் திருவாசகம் போன்ற பிற சின்னமான தமிழர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார், இது இந்துக் கடவுளரின் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனுக்காக எழுதப்பெற்ற ஒரு பாடல் ஆகும். அவர் பல புத்தகங்களை, சில தமிழிலும் மற்றும் சில ஆங்கிலத்திலும். எழுதியுள்ளார்..

கனடாவில் தமிழர்களின் குரலாகச் செயல்படும் ஒரு அமைப்பாக கனடிய தமிழர் பேரவை, நமது மொழியான தமிழுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், , அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்கும் இந்த வரலாற்றுத் திட்டத்தை மேற்கொள்வது நமது கடமையாகும் எனக் கருதுகின்றது.

எங்களைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழிக்கு உயரிய பங்களிப்பைச் செய்த ஒரு தனி மனதரான இவரை அங்கீகரிப்பதுடன் நன்றியுணர்வை வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாகும் என்றே கருதுகின்றோம்.

கனேடியத் தமிழர் பேரவையானது, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை ஆரம்பித்து ஜி.யு. வட அமெரிக்காவில் ஒரு தமிழ் அறிஞருக்காக நிறுவிய முதல் நினைவுச்சின்னமாகும். நினைவுச்சின்னம் தவிர, பெடெக் வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு கண்காட்சி மற்றும்
அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் சிலையையும் நாங்கள் காட்சிப்படுத்துகிறோம்’ என்று தனது உரையில் தெரிவித்தார்.

இங்கு காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.