இலங்கைக்கு சீனா வழங்கும் உதவிகள் ஆபத்தாவை என்கிறார் விந்தன் கனகரத்தினம்
Share
இலங்கையில் அதுவும் தமிழ் மக்களுக்கு சீனாவால் வழங்கப்படுகின்ற உதவிகள் இந்தியாவை சீண்டுவதற்காக வழங்கப்படுகின்ற நிலையில் எதிர்காலத்தில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களை கொன்று குவிப்பதற்கு சீனா பெரும் பங்காற்றியது.
தற்போது அபிவிருத்தி என்ற போர்வையில் இந்தியாவை கண்காணிப்பதற்காக இலங்கையை தமது கேந்திர நிலையமாக்கும் முயற்சியில் சீனா இறங்கி உள்ளது.
அதன் ஏற்பாடாக வடக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு உதவிகளையும் மீனவர்களை முன்னேற்ற போகிறோம் என கடல் அட்டைப் பண்ணைகளை சீனா திட்டமிட்டு பினாமிகளினால் பாரிய நிதிகளை செலவு செய்து வருகிறது.
உண்மையில் சீனா உதவி செய்ய வேண்டும் என்றால் இலங்கையில் தமது இருப்புகளை தக்க வைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
தமிழ் மக்களுக்கு எதிரான இறுதிச் யுத்தத்தில் அதிக அளவிலான ஆயுதங்களை வாரி வழங்கி எமது மக்களை கொன்று அழித்ததில் சீனாவுக்கு பெரும் பங்கு உள்ளது.
இவ்வாறான நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களை அழித்த நன்றிக்காக அம்மாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசாங்கம் சீனாக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கியது.
இவ்வாறு சீனாக்கு வழங்கப்பட்ட அம்மாந்தோட்டை துறைமுகத்தில் எதிர்வரும் மாதம் அளவில் சீனாவின் மிகப் பெரிய இராணுவ ஆய்வுக் கப்பல் ஒன்று வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல அம்மாந்தோட்டையில் சீனாவின் படைத்தளம் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதான செய்திகளும் வெளியாகியுள்ளன.
சீனா இலங்கைக்கு உதவி செய்யும் போர்வையில் இந்தியாவுக்கு எதிரான போரை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்ற போர்வையில் தமது இருப்பை இலங்கையில் தக்க வைத்துக் கொள்வதற்கும் கடற்பரப்பில் அதற்கான வேலை திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சீனா உதவிகளை வழங்கினால் மக்கள் தம்மை ஏற்றுக் கொள்வார்கள் என இணைக்கிறார்கள் மக்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
எமது அயல் நாடான இந்தியாவில் வாழ்கின்ற எட்டு கோடி எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு எதிராக சீனா செயல்பட நினைத்தால் அதனை ஒன்று திரண்டு எதிர்ப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.