LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சி வைத்தியசாலையில் கர்ப்பப்பை அகற்றிய விவகாரம் – அமைச்சிடம் விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு

Share

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பை அகற்றிய விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் மத்திய சுகாதார அமைச்சிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பிள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பில் கணவரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பின்வருமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது

யூன் மாதம் கிளிநொச்சி வைத்திய சாலையில் தனது கர்ப்பம் தரித்த மனைவி பிரசவத்துக்காக சென்ற போது வைத்தியர்களால் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்பட்டதால் எனது குழந்தை இறந்துள்ளது

எனது குழந்தை இறந்தமைக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குழந்தை இறந்ததுடன் கர்ப்பப்பை அகற்றுவதற்கு எனது மனைவிக்கோ அல்லது என்னிடமோ வைத்தியர்கள் கேட்காத நிலையில் எனது குழந்தை இறந்தமைக்கும் எனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியமைக்கும் நீதி கிடைக்க வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு கிளிநொச்சி வைத்தியசாலையில் முறைப்பாட்டளர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் எடுக்கப்பட் நடவடிக்கைகள் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தால் பதில் வழங்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் குறித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சும் குறித்த வைத்தியசாலைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.