LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்திய மீனவர்கள் மீதான மீலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என்கிறார் எம்.வி.சுப்பிரமணியம்

Share

காங்கேசன்துறை கடல் எல்லையில் வைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை வடமாகாண மீனவர்கள் சார்பில் கண்டிப்பதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இன்றையதினம் செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை காங்கேசன் துறைக் கடல் எல்லையில் வைத்து இந்திய நாட்டுப் படகு மீனவர்கள் மிகவும் கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

எமது வடபகுதி மீனவர்கள் இந்தியா ரோலர் மீன்பிடிப் படகுகளால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்திய மீனவர்களின் வருகை சற்று குறைந்துள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் எமது மீனவர்களையும் இந்திய மீனவர்களையும் தூண்டிவிடும் நோக்கில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

கடற்தொழிலையே வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் இந்தியா மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் பல இலட்சம் பெறுமதியான கடத்தொழில் உபகரணங்களும் சூறையாடப்பட்டுள்ளது.

ஆகவே தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் உடல்நலம் தேர்ச்சி பெறுவதுடன் குறித்த தாக்குதலை வடமாகாண மீனவர்கள் சார்பில் கண்டிக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசாவும் கலந்து கொண்டார்.