LOADING

Type to search

இலங்கை அரசியல்

காரைநகரில் பொலிசாரை தாக்கிய கனேடியப் பிரஜைகள் மீது வழக்குப் பதிவு

Share

எமது யாழ்ப்பாணம் செய்தியாளர்

காரைநகர் கடற்கரையில் நீராடிய 10 கனேடியப் பிரஜைகள் பொலிசாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் கசூரினாபீச் கடற்கரையில் கடந்த திங்கள்கிழமை (21) நீராடிய கனேடியக் குடியுரிமை பெற்ற 10 பேர் நீராடியுள்ளனர். இதில் சிலர் மது போதையிலும் காணப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒருவரின் கை விரலில் இருந்த தங்க மோதிரம் கடலில் தவறி வீழ்ந்துள்ளது. அதனால் கடற்கரையில் பணியில் இருந்த பொலசாரிடம் அதனை மீட்டுத் தருமாறு கோரியுள்ளனர்.

அதனை மீட்கும் அளவிறகு தமக்கு பணி அனுபவம் கிடையாது என பொலிசார் கூறியதனால் ஏறபட்ட தர்க்கத்தின் போது பொலிசாரை தாக்க முறபட்டதுடன் ஒருவர் பொலிசாரை கடித்துள்ளார். இதனால் அங்கே பணியில் இருந்த பொலிசார், கனேடியர்கள் 10 பேரையும் கைது செய்து அரச சேவைக்கு இடையூறு செய்த குற்றச் சாட்டின் கீழ் மல்லாகம் நீதிமன்றில் முறபடுத்தியுள்ளனர்.

இதனபோது கைது செய்யப்பட்ட 10 கனேடியர்களில் இருந்த 4 பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு 6 ஆண்களும் எதிர் வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடிகாயத்திற்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சையின் பின் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா மற்றும் இதர வேலைகளிற்காக வருபவர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பதால் தங்கள் மீது உள்ளூரில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தவறான புரிதலில் உள்ளனர் என்று பொலிசார் கூறுகின்றனர்.