எமக்கு விமோசனம் இந்தியாதான் என நம்பியவர் அமிர்தலிங்கம் – 96வது பிறந்த தின நிகழ்வில் ஜெபநேசன் அடிகளார் தெரிவிப்பு
Share
பு.கஜிந்தன்
எமக்கு விமோசனம் இந்தியாதான் என நம்பியவர் அமிர்தலிங்கம் – 96வது பிறந்த தின நிகழ்வில் ஜெபநேசன் அடிகளார் தெரிவிப்பு
தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு இந்தியாவே விமோசனம் வழங்கும் என அன்றே நம்பிய தலைவர் அமிர்தலிங்கம் என முன்னாள் பேராயர் ஜெபனேசன் அடிகளார் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை செல்வநாயகம் அறக்கட்டளை நிலையத்தில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்த தின நிகழ்வில் பேருரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1927 ஆம் ஆண்டு பிறந்த அமிர்தலிங்கம் 1987 ஆம் ஆண்டு இறக்கும் வரை தமிழ் மக்களின் வடிவுக்காக போராடிய தளபதி.
சிறந்த தமிழ் பேச்சாற்றலும் ஆங்கில மொழி புலமையும் உலக தலைவர்கள் மத்தியில் அவருக்கு என ஒரு தனி இடத்தை வழங்கியது.
1987 ஆம் ஆண்டு இறப்பதற்கு முன்னர் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
ஒருமுறை இந்தியாப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய ரஷ்யா ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகை தந்த போது தனது அருகில் அமர்தலிங்கத்தையும் சந்திப்பில் அமர்த்தினார்.
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை இந்தியாவால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்ற உறுதியுடன் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை எதிர்ப்புகளின் மத்தியிலும் ஏற்றார்.
தற்போது பதின்மூன்று தொடர்பில் எல்லோரும் பேசுகிறார்கள் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பயனாக ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தத்தை தமிழ் மக்கள் சார்பில் அங்கீகரித்தவர் அமிர்தலிங்கம்.
பதின்மூன்று போதாது, பதின்மூன்று வேண்டாம் என்ப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களின் இருப்பை தக்க வைப்பதற்கு பதின்மூன்று உதவும் என கருதிய அமிர்தலிங்கம் வடக்கு கிழக்கு தமிழ்மொழி பேசும் மாகாணமாக அங்கீகரிப்பதற்கு முன்நின்று உழைத்தார்.
எங்களுடைய இளமை காலங்களில் அமிர்தலிங்கத்தினுடைய பேச்சை கண்டுகளிப்பதற்கு பல்லாயிரக்கணக்கானோர் அரசியல் கூட்டங்களுக்கு வருகை தருவார்கள்.
ஆனால் அரசியல் கூட்டங்களில் அமிர்தலிங்கத்தினுடைய பேச்சை இறுதியாகத்தான் வைப்பார்கள் அப்போதுதான் மக்கள் எழும்பாமல் கூட்டத்தை கண்டுகளிப்பார்கள் என்பதற்காக.
அவ்வாறு தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தலைவராக மிளிர்ந்த அமிர்தலிங்கம் தனது 1987 ஆம் ஆண்டு 62 ஆவது வயதில் மரணத்தை தழுவ வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இங்கிலாந்தின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் வின்சென்ட் சேர்ச் வெல் தனது 60 ஆவது வயதிலேயே மக்கள் தலைவனாக தெரிவு செய்யப்பட்டார்.
அவ்வாறான நிலையில் பெருந்தலைவர் செல்வநாயகத்திற்கு பின்னர் தமிழ் மக்களின் தலைவனாக அமிர்தலிங்கம் விளங்கிய நிலையில் அவரது இறப்புக்கு பின்னர் இன்றுவரை தமிழ் மக்களுக்கான தலைமையை ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடமாக காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.