மன்னார் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் நிகழ்வு ஒன்றை முன்னெடுப்பு
Share
(09-09-2023)
மன்னார் பேசாலை கிராமத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை கொண்ட ஆரம்ப பாடசாலை யாக திகழும் மன்/ சென்மேரிஸ் பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைக்கும் நோக்கிலும் குறித்த பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நோக்கிலும் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் நிகழ்வு ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1999 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற பழைய மாணவர்கள் ஒன்று திரண்டு மாபெரும் நிகழ்வு ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
குறித்த நிகழ்வு சென்மேரிஸ் பாடசாலையில் அதிபர் செபஸ்டியான் ராஜேஸ்வரன் பச்சேக் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(9) காலை பழைய மாணவர்கள் ஒன்று திரண்டு பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்திலிருந்து மோட்டார் வண்டி மற்றும் நடை பவனியாக பிரதான வீதி மற்றும் பேசாலை கிராமம் வீதி வழியாக சென்மேரிஸ் பாடசாலை யை வந்தடைந்தனர்.
பின்னர் அவர்கள் வரவேற்கப்பட்டு, ஒன்று திரண்ட மாணவர்கள் விளையாட்டு போட்டி மற்றும் கலை நிகழ்வுகளில் ஈடுபட்டதோடு வலுவான பழைய மாணவர் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இதன் போது குறித்த பாடசாலையில் இதுவரை ஆசிரியர்களாக கடமை புரிந்த பேசாலை கிராமத்தின் ஆசிரியர்களும் இன்று கௌரவிக்கப் பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
குறித்த பழைய மாணவர்களால் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் அதிக மாணவர்களை கொண்ட பாடசாலையாகவும் முதன்மை பாடசாலையாகவும் குறித்த சென்மேரிஸ் ஆரம்ப பாடசாலை சிறப்பு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முன்னெடுக்கப்பட்ட பழைய ஆண்டு பிரிவு மாணவர்கள் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பேசாலை பங்கு தந்தை ஏ .அன்ரன் அடிகளார் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.