சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை வலுவூட்டப்பட வேண்டும் – யாழ்ப்பாண மாவட்ட செயலர்
Share
பு.கஜிந்தன்
சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை வலுவூட்டப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிபாலசுந்தரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் பங்குதாரருக்கான கலந்துரையாடல், இயக்குனர் அருட் தந்தை பிரான்சிஸ் அடிகளாரின் வழிநடத்துதலில், யாழ்ப்பாண மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் (20.09.2023) இன்று யாழ்ப்பாணம் கியூடெக் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டார். அதன்பின்னர் கருத்துதெரிவிக்கையில்,
இவர் தனது உரையில் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் சகல மட்டத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கடமையாகும்.
பொறுப்புள்ளவர்களின் பொறுப்பற்ற தன்மையும், சட்டத்தை மதியாமையும், சட்டத்தை முழுமையாக பின்பற்றாமையும், மனப்பாங்கில் மாற்றம் ஏற்படாமையுமே நாம் பின்னடைவை எதிர் கொள்ள காரணமாகின்றன.
இவற்றில் இருந்துசிறுவர்கள் முதல் சகல மட்டத்தினரும் ஒன்றிணைந்து செயற்பட்டு
பரிந்துரைக்கின்ற சூழலை இவ் ஒன்றுகூடல் ஏற்படுத்த வேண்டும். சகல அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் திட்டமிடலை தூரநோக்குடன் வகுப்பது காலத்தின் தேவையாகும் – என்றார்.
தொடர்ந்து இக்கலந்துரையாடலை யாழ்ப்பாண பல்கலைகழக பேராசிரியர் திருமதி ஞா.இராஜேந்திரமணி நெறிப்படுத்தினார். அவர் தனது கருத்துரையில், சூழலும் சுற்றுலா அபிவிருத்தியும் மேம்படுத்துவதில் சகல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பொறுப்பும் வழிகாட்டலும் சூழலை மேம்படுத்துவதுடன் சுற்றுலா தளங்களாக மாற்றக் கூடிய வல்லமையும் செயலூக்கம் பெற வேண்டும்”என்றார்.
இக்கலந்துரையாடலில் தெல்லிப்பளை, வேலணை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலர்கள், சுகாதார பரிசோதகர்கள், வனவள திணைக்கள உத்தியோகத்தர்கள் கடல்வள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சுற்றுச் சூழல் அதிகார சபை, நீர்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், தேசிய நீர்வழங்கல்அதிகார சபை உத்தியோகத்தர்கள ,ஊடகவியலாளர்கள் மற்றும் கிராமிய சமூகத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.