மொன்றியால் கவிஞரும், எழுத்தாளருமாகிய திருமதி யோகநாயகி நடராஜாவின் மூன்று நூல்கள் வெளீயீடு
Share
கியூபெக் தமிழ் மூத்தோர் இணையத்தின் அங்கத்தவரும், கவிஞரும்,எழுத்தாளருமாகிய மதிப்புக்குரிய திருமதி யோகநாயகி நடராஜாவின் படைப்புக்களான
இலங்கையில் உள்ள ஆலயங்கள் (கட்டுரைகள் )
உள்ளத்தின் ஊற்றுக்கள் (கவிதை தொகுப்பு)
திருக்குறள் சித்தனை விளக்கம் (கருத்து குவியல்)
ஆகிய மூன்று நூல்களும் 17-09-2013ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை கியூபெக் தமிழ் மூத்தோர் இணையமண்டபத்தில் நூற்றுகணக்கான தமிழ் பற்றாளர்கள் மத்தியில் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டன.
மொன்றியால் திருமுருகன் கோவில் பிரதம குருக்கள் சிவஸ்ரீ வெங்கடேஸ்வர குருக்கள் அவர்கள் மங்கள தீபம் ஏற்றி ஆசிவழங்க விழா ஆரம்பமாகியது.
ஆரம்பமாக தமிழ்தாய் வாழ்த்து பாடல்,கனேடிய தேசிய கீதம் இசைக்கப்பட திருமதி உமராஜ் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இவ் நூல்களின் ஆய்வுரைகளை திரு சண்முகராஜா ( வீணை மைந்தன்) திரு க.உயிரவன், திருமதி உமா மோகன்,திரு செல்லையா மூர்த்தி (தமிழ் ஆசிரியர்) திருமதி இளவரசி இளங்கோவன் (தமிழ் ஆசிரியை)திருமதி ரஞ்சனி ரஞ்சன் (அகரம் வானொலி) ஆகியோர் மிக சிறந்தமுறையில் வழங்கி நிகழ்வை சிறப்பித்திருந்தனர்
தொடர்ந்து சிறப்புரையை திரு காசிப்பிள்ளை ஜெயசேகரம்( கவிஞர்,ஆசிரியர்) திரு உதயகுமார் (ஆத்மஜோதி ) திரு காசிப்பிள்ளை ஜெகசோதிலிங்கம்(கவிஞர்,தமிழ் ஆசிரியர்)திருமதி தயாபரி சர்மா ஆகியோர் வழங்கி யிருந்தார்கள்.
நிகழ்வில் மூத்தோர் இணைய அங்கத்தவர்களும்,வருகை தந்திருந்த தமிழ் பற்றாளர்களும் பொன்னாடைகள் போர்த்தி,மலர்க்கொத்துகள் வழங்கி தமது அன்பையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு விழா நாயகியான தமது அங்கத்தவரான யோகநாயகி நடராஜா அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தார்கள்.