வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மது ஒழிப்பு தினம்!
Share
03-10-2023 , அன்று வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமானது சங்கானை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், க.பொ.த.உயர்தரப் பரீட்சை ரயில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு, உலருணவுப் பொதிகள் வழங்கல் என்பன இடம்பெற்றன. இதன்போது மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் தலைவர் க.புஸ்பராசா அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் அவர்களும், சிறப்ப விருந்தினர்களாக சங்கானை பிரதேச செயலர் திருமதி பொ.பிரேமினி, சங்கானை கல்விக் கோட்டப் பணிப்பாளர் திரு. நோபேட் உதயகுமார், சங்கானை தெற்கு கிராம உத்தியோகத்தர் து.சுபேஸ், சங்கானை லயன்ஸ் கிளப் தலைவர் ஆ.குணசேகரம், சங்கானை பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் திருமதி கோ.கிருஸ்ணவேணி, சங்கானை பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் திரு.கேசவதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், பெற்றோர்கள், மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.