LOADING

Type to search

இலங்கை அரசியல்

மதுசாரப் பாவனையாள் தினம் 40 பேர் மரணம் – நாள் ஒன்றிற்கு 60 கோடிக்கு விற்பனை

Share

இலங்கையில் மதுசாரப் பாவனையால் நாள் ஒன்றுக்கு 40 பேர் அகால மரணம் அடைவதுடன் வருடம் ஒன்றுக்கு 15,000 பேர் அகால மரணம் அடைவதாக மதுசாரம் மற்றும் போதை பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் றகீம் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பிறந்தநாள் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளருக்கான செயல் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் சனத்தொகையில் 35 வீதமானவர்கள் மதுசாரம் அருந்துகின்ற நிலையில் மதுசாரம் அருந்தும் நபர்களுக்கிடையே மதுசாரப் பாவனை 18.9 வீதமாகக் காணப்படுகிறது.

இலங்கையில் நாளொன்றுக்கு 49.7 கோடி அதாவது (497 மில்லியன்) பியர் பாவனை 9.3 கோடி அதாவது (93 மில்லியன்) ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையின் வருமானத்தைப் பொறுத்தவரையில் மதுசார இறக்குமதியால் அதிக வருமானம் கிடைக்கிறது என பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமல்லாது புகைத்தல் மற்றும் மதுசாரா பாவனையை இளம் சமுதாயத்திடையே அதிகரிப்பதற்காக கம்பெனிகள் பல்வேறு உத்திகளை கையாண்டுவருகின்றன.

இலங்கையில் ஆய்வு செய்யப்பட்டதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 82 விதமானவர்கள் குடிப்பதில்லை என ஆய்வுகளில் உறுதிப்படுத்தி உள்ளன.

இலங்கையில் புகைத்தல் மதசாரப் பாவனை மற்றும் போதை பொருள் பாவனை ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு முறையான கொள்கைகள் மற்றும் தடுப்பதற்கான வழிகாட்டிகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

இவற்றை தடுப்பதற்கு ஊடகங்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமாக பார்க்கப்படுகின்ற நிலையில் இந்தியா ஊடகங்களில் மதுசாரம் மற்றும் போதை பொருள் பாவனை தொடர்பான விளம்பரங்களை இந்தியா ஊடகங்கள் ஒளிபரப்புவதில்லை.

ஆனால் இலங்கையில் இந்தியாவைப் போன்ற ஊடக கலாச்சாரத்தில் முன்னேற வேண்டிய தேவை உள்ளது ஏனெனில் பெரும்பாலான ஊடகங்களின் தலைவர்கள் வியாபார நிறுவனங்களை நடத்துபவர்களாக காணப்படுகின்றனர்.

ஆகவே கடந்த காலங்களை விட இலங்கையில் புகைத்தல் பாவனை மற்றும் மதசார பாவனை குறைந்த வரு நிலையில் அதனை தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊடகவியலாளர்களின் பங்கு அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.