LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Share

இலங்கை தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என கூறப்படுகின்றது.

தனியார் சூரியப்படல நிறுவனம் ஒன்றின் தலைவர் திரு.ஜயந்த சமரகோன் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 1000 ஏக்கரில் 700 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் அமைப்பு நிறுவப்படும்.

மேலும் சூரிய சக்தி மின் அமைப்பு அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பூநகரி ஏரியை முழுமையாக அபிவிருத்தி செய்து அப்பிரதேசத்தில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் வகையில் விவசாயிகளுக்கு மின்சார வசதி செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் 5 பில்லியன் ரூபாவினை செலவழிக்க உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சார அமைப்பில் சேர்க்கப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் பயனடைவார்கள். இது தொடர்பான திட்ட மீளாய்வு கூட்டம் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இன்று 09.10.2023 இடம்பெற்றது. கலந்துரையாடலில் நீர்ப்பாசன திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம், மின்சார சபை, விவசாய திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளும் மற்றும் பல அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.