நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் “மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பு, ஜனநாயகப் பண்பற்ற நடவடிக்கை
Share
இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் அவலநிலையை தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள் விவாதிப்பதற்கான அரசியல் வெளியை மறுப்பது பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்று கூடுவதற்கான சுதந்திரத்துக்கான உரிமைகளை மீறுகிறது
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டுஉறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்தஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்கண்டிக்கிறது. இந்த ஜனநாயகப் பண்பற்ற செயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும்ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று. “மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச்சுதந்திரம் அத்தியாவசியமானது.”
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் காலனித்துவ நாடாக இருந்த ஐக்கிய இராச்சியம், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்களை
இலங்கைத் தீவில் முதலில் கோப்பித் தோட்டங்களிலும், பின்னர்தேயிலைத் தோட்டங்களிலும் வேலை செய்வதற்குகொண்டு வந்தபோது அவர்களின் உரிமைகள்பாதுகாக்கப்படுமென உறுதியளித்தது. 1948ஆம்ஆண்டு முதல், சுதந்திரத்தைத் தொடர்ந்துஉடனடியாக சிறீலங்கா அரசாங்கமானது 1948 சிலோன் குடியுரிமைச் சட்டம், 1949 இந்தியபாகிஸ்தானிய வசிப்பிட குடியுரிமைச் சட்டம்,1949 சிலோன் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் மூலம்10 மில்லியன் மலையகத் தமிழர்களின்வாக்குரிமையைப் பறித்து, அவர்களைநாடற்றவர்களாக்கி ஐக்கிய இராச்சியம் மலையகத்தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழியை இலங்கை புறந்தள்ளியது. 1958, 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் மலையகத் தமிழர்கள்இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியதுடன், இனவன்முறையின் இலக்காகக் காணப்பட்டனர். இன்றை வரைக்கும் இலங்கைத் தீவில் பொருளாதாரத்தைமேம்படுத்துகின்ற வருமானத்தை அளிக்கும் தொழிற்துறையாகவுள்ள இலங்கைத் தீவில் தேயிலைத்தொழிற்துறையின் முதுகெலும்பாகவுள்ள இலங்கைத் தீவிலுள்ள மலையகத் தமிழர்களின் சமூகப் பொருளாதார மற்றும் வசிப்பிட நிலைகள்மனிதநிலைக்கு கீழ்ப்பட்டவையாக உள்ளன.
இலங்கைத் தீவிலுள்ள மலையகத் தமிழர்களின்வாழ்வுகளை உயர்த்துவதற்கான வழிகள் மற்றும்வழிவகைகளை விவாதிப்பதையே நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கு நோக்காகக் கொண்டிருந்தது. கருத்தரங்கானது ஓய்வுபெற்ற தமிழ்நாடு நீதிபதி அரி பரந்தாமனால் தலைமை தாங்கப்படவிருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளர்களில், அனைத்திந்திய மக்கள் சிவில்உரிமைகள் சங்கத்தின் செயலாளர் எஸ். சுரேஷ், திரைப்பட இயக்குநர் திரு.கோபிநயினார், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனட் சபை உறுப்பினர் பேராசிரியர் சரஸ்வதி, தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் திரு.எஸ்.எஸ்.பாலாஜி, கொங்கு இளைஞர் சங்கத்தின் தலைவர் திரு. உ.தனியரசு (முன்னாள் எம்.எல்.ஏ), சிரேஷ்டவழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம் திரு.சங்கரசுப்பு, , தமிழ் வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர் டி.எம்.ஜான்சன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள், ஏனைய தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்டபேச்சாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்ளரங்ககருத்தரங்கிற்கு அனுமதி மறுத்தமை தொடர்பாக தமிழ்நாடு பொலிஸ் அதிகாரிகள், எழுத்தில்ஒன்றைரை மாதங்களுக்கு முன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதியின் மறுப்புக்கான எவ்வித காரணத்தையும் இன்றுவரை தெரிவித்திருக்கவில்லை.
ஜனநாயக ஆட்சியின் அச்சு சட்டவாட்சி. கருத்தரங்கின் மீதான தடையானது, பேச்சுச்சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தின் பாரியமீறலொன்றாகும். தவிர, இலங்கைத் தீவிலுள்ள தமிழர்களின் அவலநிலையை விவாதிக்க மற்றும்அவர்களுக்கு உதவும் வழிகளை ஆராய்வதற்கானதமிழ் நாட்டிலுள்ள 60 மில்லியன் தமிழர்களின்அரசியல் வெளியையும் இது மறுக்கிறது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின்தடையை நீடிப்பு தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளில் 2019ஆம் ஆண்டில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கம், துதமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடையானது இந்தியாவில் நாடுகடந்ததமிழீழ அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகளில்பாதிப்பை ஏற்படுத்துகின்றதென நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. இந்தியஅரசாங்கத்தின் நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்தியாவில் அரசியல் செய்ற்பாடுகளில்நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபடுவதில் எவ்விதசட்டரீதியான தடையுமில்லையென தீர்ப்பாயம்குறிப்பிட்டிருந்தது.
“”மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரடின் அனுமதிமறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுக டந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர்மேற்கொண்டுள்ளனர்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
விஸ்வநாதன் உருத்திரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்