சிலாவத்துறை முஸ்லிம் மாகா வித்யாலயத்தில் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் திறந்து வைப்பு
Share
மன்னார் நிருபர்
(23-10-2023)
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க ஸஹாத் ஹவுஸ் (Zakat House) நிறுவனத்தின் நிதி பங்களிப்பில் ISRC நிறுவனத்தின் அனுசரணையில் மன்/ சிலாவத்துறை முஸ்லிம் மாகா வித்யாலயத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி பாடசாலைக் கட்டிடமானது நேற்று (22) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகராக அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர்,வடமாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், குவைத் நாட்டின் இலங்கைக்கான பிரதித் தூதுவர், ஸஹாத் ஹவுஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் மற்றும் செயலாளர், (Muslim Hands) முஸ்லிம் ஹேண்ட்ஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி, உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.