புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு!
Share
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமான சீன அரசாங்கத்தினால் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் வேலணை புங்டுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு திங்கட்கிழமை (23.10.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் துறைசார் அதிகாரிகளால் வழங்கிவைக்கப்பட்டது.
புங்குடுதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற குறித்த இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள பரிசோதகர் ஜெயசிலன், கடற்றொழில் உத்தியோகத்தர் அகிலன், பங்குடுதீவு கடற்றொழில் பரிசோதகர் கருணாநிதி, மற்றும் கடற்றொழில் அமைச்சின் பிரதிநிதிகளான கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கந்தசாமி கமலேந்திரன், எனப் பலரும் கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வைத்திருந்தனர்.
கடற்றொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 75 லீற்றர் வீதம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78 லீற்றர் என்ற அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுமை குறிப்பிடத்தக்கது.