அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே காணப்படுகிறது
Share
– மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ
(31-10-2023)
அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே காணப்படுகிறது.எனவே பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காது விட்டால் துணிந்து கேட்பதற்கு அவர்கள் வலுவூட்டப்பட்ட வேண்டியவர்களாக உள்ளனர் என மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.
‘பெண்களை அரசியலில் வலுவூட்டுவதற்கான செயலமர்வு’ நேற்று திங்கள் (30) மற்றும் இன்று செவ்வாய் (31) ஆகிய இரு தினங்கள் மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
குறித்த கருத்தமர்வில் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னால் உறுப்பினர்கள், உள்ளடங்கலாக அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கருத்தமர்வை வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.புஸ்பகாந்தன் முன்னெடுத்தார்.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
பெண்களாகிய நீங்கள் எங்களின் சொத்துக்கள்.ஏன் என்றால் நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி நீங்கள் அனைவரும் எமது மாவட்டச் சொத்துக்கள்.நீங்கள் அனைத்து விடையங்களையும் கையாளப் போகின்றவர்கள்,கையாளுகின்றவர்கள்.
எனவே எங்களின் செயற்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம்.அதன் அடிப்படையில் பெண்களாகிய உங்களை அரசியல் ரீதியில் வலுவூட்டும் வகையில் இந்த இரு நாள் செயலமர்வை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ) முன்னெடுத்துள்ளது.
இந்த நாட்டின் அதிக எண்ணிக்கையான வாக்காளர்களாக பெண்களே உள்ளனர்.ஆனால் அரசியலில் பெண்களுக்கான ஒதுக்கீடு 50 வீதம் என குறிப்பிடப்பட்டுள்ளமை வெறும் பேச்சிலும்,எழுத்திலும் உள்ளது.
இந்த நாட்டின் எல்லா செயற்பாடுகளுக்குமான தூண்களாக பெண்களே உள்ளனர்.எனவே பெண்களுக்கான 50 வீத ஒதுக்கீட்டை அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பெண்கள் இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் அனைத்து துரைகளிலும் உள்ளனர். இந்த நாட்டின் அபிவிருத்திக்காகவும், பொருளாதாரத்திற்கும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாகும்.எனவே பெண்களை அரசியல் ரீதியில் வலுவூட்ட தொடர்ந்தும் செயல்பட வேண்டும்.
அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமையினால் ஒதுக்கீடுகளும் குறைவாகவே காணப்படுகிறது.
எனவே பெண்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைக்காது விட்டால் துணிந்து கேட்பதற்கு அவர்கள் வலுவூட்டப்பட்ட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.