உலகத்தில் இடம்பெற்று வருகின்ற யுத்தங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இந்த நாள் அமைய வேண்டும் -மஹா தர்மகுமார குருக்கள்
Share
(11-11-2023)
தீபாவளி திருநாளில் உலகத்தில் இடம்பெற்று வருகின்ற யுத்தங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதற்கும், எல்லா மதங்களையும் மனித நேயத்துடன் மனிதர்கள் மதித்து வாழ்வதற்கும் ஒரு முன்னுதாரணமாக இந்த நாள் அமைய வேண்டும் என மன்னார் மாவட்ட இந்து மத பீடத்தின் தலைவர் செந்தமிழ் அருவி கலாநிதி சிவசிறி மஹா தர்மகுமார குருக்கள் தெரிவித்தார்.
அவர் விடுத்துள்ள தீபத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,
உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற இந்து மக்கள் இன்றைய நாளை இனிய தீபாவளி நாளாக கொண்டாடி வருகின்றனர்.இந்த தீபாவளி திருநாள் என்பது நரகாசுரன் கிருஸ்ன பரமாத்பநாலே அழிக்கப்பட்ட ஒரு நாளாக நினைவு கூறப்படுகிறது.
நரகாசுரன் என்பது அசுரன் மட்டுமல்ல எங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அசுரனை நாங்கள் ஒவ்வொருவரும் வதம் செய்ய வேண்டும் என்ற நோக்கிலே இருள்கள் அகன்று ஒளியேற்றி கொண்டாடப்படுகின்ற ஒரு உண்ணதமான பண்டிகையாக இந்து மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தீபாவளி என்பதன் பொருள் தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபடுதல் என்பதாகும்.
எனவே இன்றைய தீபாவளி திருநாளில் உலகத்தில் இடம்பெற்று வருகின்ற யுத்தங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ்வதற்கும், எல்லா மதங்களையும் மனித நேயத்துடன் மனிதர்கள் மதித்து வாழ்வதற்கும் ஒரு முன்னுதாரணமாக இந்த நாள் அமைய வேண்டும்.
இதற்கு எல்லாம் வல்ல இறைவனுடைய அனுகிரகங்கள் கிடைக்க வேண்டும் என்பதோடு,அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.என தெரிவித்தார்.