LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை ஆரம்பம்

Share

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை வாசம் என்ற பெயரில் நடாத்தி வரும் மலர்க்கண்காட்சி இம் முறையும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி நடைபெறும்  மலர் முற்றம் காட்சித்திடல் நாளை புதன் கிழமை (22.11.2023) பிற்பகல் 2.30 மணிக்கு சங்கிலியன் பூங்காவில் (கிட்டுப் பூங்கா) திறந்துவைக்கப்படவுள்ளதுகௌரி முகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இத் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்புரைஞர்களாக வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்இ சமூக அரசியற் செயற்பாட்டாளர் . அருந்தவபாலன்இ தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்ப்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இக் கண்காட்சி இம் மாதம் 30ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7.00 மணி வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியைப் பார்வையிடவரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம் முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது