LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா- ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் நகரில் 27ம் திகதி – இடம்பெற்ற ‘தமிழர் நினைவெழுச்சி நாள்- பிரமாண்டமான நிகழ்வில் காலை தொடக்கம் இரவு வரை பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் உருக்கத்தோடு வந்து மாவீரர்களை நினைவு கூர்ந்தனர்

Share

கனடா- ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் நகரில் அமைந்துளள விசாலமான திடலான ‘மார்க்கம் பெயர் கிறவுண்ட்ஸ்’ மைதானத்தில் அமைக்கப்பெற்ற விசேட கொட்டகை அதனுள்ள நிறுவப்பெற்ற அழகிய மேடை ஆகியவற்றில் திங்கட்கிழமை – 27ம் திகதி இடம்பெற்ற ‘தமிழர் நினைவெழுச்சி நாள்- மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பிரமாண்டமான நிகழ்வில் காலை தொடக்கம் இரவு வரை சுமார் 75 ஆயிரம் (அல்லது அதனிலும் சற்று அதிகமானவமர்கள்0 உணர்வாளர்கள் உருக்கத்தோடு வந்து மாவீரர்களை நினைவு கூர்ந்தனர் என்ற செய்தி ஏற்பாட்டாளர்களுக்கு மிகுந்த மன நிறைவை தந்துள்ளது எனலாம். இந்த நிகழ்வை பல மின் மற்றும் இணையவழி ஊடகங்கள் நேரடியாக மக்களுக்கு எடுத்துச் சென்ற அவர்களையும் உணர்வு கொண்டவர்களாக பல மணிநேரங்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தவும் கருவிகளாக செயற்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காலை 7.00 மணி தொடர்க்கம் இரவு சுமார் 11.00 மணி வரை நடைபெற்ற இந்த ‘தமிழர் நினைவெழுச்சி நாள்- மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பிரமாண்டமான நிகழ்வை மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்திருந்தனமர் தமிழர் நினைவெழுச்சி நாள் செயற்குழுவினர்.
காலை தொடக்கம் விடுதலைப் பாடல்கள் மற்றும் விடுதலைப் பாடல்களுக்குரிய நடனங்கள் மற்றும் உணர்வுபூர்வமான உரைகள் ஆகியள இடம்பெற்று .இறுதிவரை எவ்வித தொய்வும் இல்லாமல் நிகழ்வு நகர்ந்து சென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

வழமை போன்று மாவீர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் ஆயிரக்கணக்கானவர்களின் படங்கள் மற்றும் அ வமரம்கள் பற்றிய விபரங்கள் அனைத்து அங்கு காட்சிப்படுத்தப்படடிருந்தன. அவற்றை மக்கள் மிகவும் பொறுமையாகப் பார்த்து மரியாதை செலுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

படங்களும் செய்தியும்
கனடா உதயன் ஆசிரிய பீடக் குழுவினர்