சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் இந்தியா தவறிழைத்துள்ளது
Share
ஒப்பந்தம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 9 இலட்சத்து 75 ஆயிரம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொகையில் 3இலட்சம் பேருக்கு இலங்கைப் பிரஜாஉரிமை வழங்குவதென்றும் 5இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு இந்தியப் பிரஜா உரிமை வழங்குவதென்றும் எஞ்சிய 1இலட்சத்து 5 ஆயிரம் மக்கள் குறித்து பிறகு பேசித் தீர்ப்பதைன இலங்கை இந்திய அரசாங்கங்கள் தன்னிச்சையாக முடிவினை மேற் கொண்டன.
இந்த ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டு 59 வருடங்களின் பின் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் இந்திய அரசு
தவறிழைத்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது. முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பாகவே சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
⦁ ஜீவன் தொண்டமான் கோரிக்கை
இந்தத் தீர்ப்பினை அடுத்து சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்இ நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமானஜீவன்தொண்டமான்கோரிக்கைவிடுத்துள்ளார்.
அத்துடன்இ சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.