‘உண்மையான’ உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் 2024 ஜனவரியில் இலங்கை செல்கின்றார்.
Share
இயக்கத்தின் யாழ்ப்பாணக் கிளையை மறுசீரமைக்கும் வகையில் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார்
2024ம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் தனது 50வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ள உண்மையான’ உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் 2024 ஜனவரியில் இலங்கை செல்கின்றார். அவர் தனது பயணத்தின் போது இயக்கத்தின் யாழ்ப்பாணக் கிளையை மறுசீரமைக்கும் வகையில் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார்.
சுமார் 25வருடங்களுக்கு மேலாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகமாக சிறப்புற பணியாற்றி உலகின் பல நாடுகளிலும் சிறப்பு மாநாடுகளை நடத்துவதற்கு ஒரு முக்கிய சக்தியாக விளங்கிய துரை கணேசலிங்கம். தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஆரம்பிக்கப்பெற்ற யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் அதன் கிளைக்கு நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை இணைக்கும் வகையில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தவுள்ளார்.
மேலும் கடந்த சில வருடங்களாக எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலச்சினையை சட்ட விரோதமாக பாவித்து தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் கூட்டங்களை நடத்தியும் மக்களை ஏமாற்றியும் செயற்பட்டு வரும் ‘போலியான’ குழுவொன்று தொடர்பாகவும் தௌிவுபடுத்தும் முகமாக யாழ்ப்பாண பத்திரிகையாளர்களையும் வானொலிச் சேவைகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.
Email contact: imtc1974@yahoo.com
ஊடகப் பிரிவு- உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்- தலைமையகம்- கனடா- 07-12-2023 .