LOADING

Type to search

கனடா அரசியல்

சனிக்கிழமை 9ம் திகதி பிரம்ரன் மாநகரில் நடைபெற்ற கனடா வாழ் கவிஞர் சந்திரமோகன நந்தவனம்’ ஒலி ஒளி கவிதைப் பேழை வெளியீட்டு விழா

Share

கனடா வாழ் கவிஞர் சந்திரமோகன் அவர்களின் ;நந்தவனம்’ ஒலி ஒளி கவிதைப் பேழை வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை 9ம் திகதி பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் ‘மயிலைக்கவி’ கஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் குவிந்திருந்த இந்த கவிதைப் பெருவிழாவில் சபையோர் கூடியிருந்து விழா ஏற்பாட்டாளர்களையும் பேச்சாளர்களையும் உற்சாகப்படுத்தினர்.
‘யுகம்’ வானொலி நிலைய அதிபர் கணபதி ரவீந்திரன் மற்றும் கவிஞர் சிவா சின்னத்தம்பி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். விழாத் தலைவர் ‘மயிலைக்கவி’ கஜன் தனது தலைமையுரையில் கவிஞர் சந்திரமோகன் அவர்களின் ‘நந்தவனம்’ ஒலி ஒளி சேர்க்கையில் வெளியிடப்பெற்ற கவிதைப் பேழையை உருவாக்குவதற்கு தானும் கவிஞரும் உழைத்த வரலாறு மற்றும் தாயகத்தில் உள்ள கலைஞர்களை பயன்படுத்திய முறைகள் போன்றவற்றை விபரித்து கவிஞரின் ஆற்றலையும் இயல்பானதும்அடக்கமான துமானபண்மையும் பற்றி உயர்வாக எடுத்துரைத்தார்.

அடுத்து உரையாற்றி கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் ‘நந்தவனம்’ கவிதைப் பேழையின் சிறப்புக்களையும் கவிஞரின் சமூகப் பார்வை மற்றும் வாழ்க்கை மீதான நேசிப்பு பற்றி எடுத்துரைத்து பின்னர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து அவரோடு அன்றைய கவிதைப் பேழையையும் ஒப்பிட்டு உரையாற்றி கவிஞர் சந்திரமோகனைப் பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்து கவிஞரும் வானொலிக் கலைஞருமான திருமதி ஜோதி ஜெயக்குமார் ‘நந்தவனம்’ கவிதைப் பேழை பற்றிய ஆய்வுரையை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் கவிஞர் சந்திரமோகன் அவர்களின் கவிதைச் சிறப்புக்களை எடுத்துக் கூறி தொடர்ந்து அவற்றை சங்க கால கவிதைகள் மற்றும் திருக்குறள் போன்ற இலக்கியப் படைப்புக்களோடு ஒப்பிட்டு கவிஞரின் உயர்ந்த சிந்தனைத் திறனை வியந்து பாராட்டினார்.
நூல் வெளியீடு ஆரம்பமானபோது சிறப்புப் பிரதியை கவிஞரின் சகோதரர் பாபநாதசிவம் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சபையோர் அனைவரும் பிரதிகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இறுதியின் கவிஞர் சந்திரமோகன் தனது நன்றியுரை கவிதை மூலம் சமரப்பித்து தனது உணர்வுகளையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்.தொடர்ந்து இனிய பாடல்களை பாடக பாடகிகள் வழங்க சபையோர் அவற்றை இரசித்துச் சென்றனர்.

சத்தியன்- கனடா உதயன் செய்திப் பிரிவு