கல்விக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது : உதவி செய்ய தயார் – தொழிலதிபர் தியாகி தெரிவிப்பு
Share
பு.கஜிந்தன்
கல்விக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது : உதவி செய்ய தயார் – தொழிலாதிபர் தியாகி தெரிவிப்பு
கல்வி கல்வி கற்பதற்கு பணம்தான் தடையாக இருக்குமானால் அதனை இயன்றவரை நிவர்த்தி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன் என தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு கட்டடத்திற்கான புதிய நுழைவாயிலை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நானும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் என்ற வகையில் இந்த நுழைவாயிலில் எனது பங்களிப்புடன் நிறைவாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டமையை இட்டு பெருமை அடைகிறேன்.
நாங்கள் கல்வி கற்ற காலங்களில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து எமது கல்வியை தொடர வேண்டிய இக்கட்டான காலப்பகுதியை எண்ணிப் பார்க்கும்போது தற்போதைய சூழல் மாணவர்களின் கல்விக்கு ஏற்றதாக இருக்கிறது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல குடும்பங்கள் நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை வழங்கி வருகிறேன்.
தெரிவு செய்யப்பட்ட பல ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகையை வழங்கி வருகின்ற நிலையில் மாணவர்களின் கல்விக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே வழங்கி வருகிறேன்.
அதேபோன்று யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களும் கல்விக்கு பணம் தடையாக இருக்கக்கூடாது.
அவ்வாறு அவர்களின் கல்வியை தொடர்வதற்கு பணம் தடையாக இருக்குமானால் பாடசாலை அதிபர் ஊடாக எனக்கு தெரியப்படுத்துங்கள் அவர்களின் குறைகளை நீக்க நான் தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.