துவிச்சக்கர வண்டியில் இருந்து மயங்கி விழுந்த யாழ்ப்பாணம் – அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் மரணம்!
Share
துவிச்சக்கர வண்டியில் இருந்து மயங்கி விழுந்த ஒருவர் நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த வல்லி சின்னத்தம்பி (வயது 67) என்ற ஆறு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி, துவிச்சக்கர வண்டியில் வீட்டில் இருந்து கடைக்கு செல்லும்போது மதியம் 12.00 மணியளவில் மயங்கி வீதியில் விழுந்துள்ளார். இதன்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 12.30 மணியளவில் மந்திகை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக அன்றையதினம் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டா இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.