LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கும் 27 வரை விளக்கமறியல்

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இரு கைதிகளுக்கு எதிராக பொலிசார் தாக்குல் செய்யப்பட்ட வழக்கில் இருவரையும் எதிர்வரும் 27ம் திகதிவரைக்கும் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கசிப்பு தொடர்பான வழக்கு ஒன்றின் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவிறாந்தில் கடந்த நவம்பர் 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிசார் அவரை கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை 23 ம் திகதி களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவரை பிணை எடுப்பதற்கு எவரும் இல்லாத நிலையில் மட்டு சிறைச்சாலையில் அடைத்தனர்

இந்த நிலையில் அவர் மீது சக கைதிகள் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அவர் 27 ம் திகதி செவ்வாய்க்கிழமை அவர் படுகாயமடைந்த நிiலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட நீதவான் பீற்றர் போல் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் மீது மொட்டையான ஆயுதத்தால் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக உயிரிழந்து ள்ளதாக கண்டறியப்பட்ட பின்னர் உறவினரிடம் சடலத்தை ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணையை முன்னெடுத்த நிலையில் உயரிழந்தவருடன் 9 கைதிகள் சிறைக்கூட அறை ஒன்றில் இருந்து வந்துள்ளதாகவும் குறித்த நபர் தொடர்சியாக கசிப்பு தேவை என சத்தமிட்டு வந்துள்ளதாகவும் இதனால் சக கைதிகளுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மீது சக கைதிகளான வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த தாக்குதல் மேற்கொண்ட இருவரும் போதைபொருள் தொடர்பாக வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் சிறையில் அடைக்கப்பட்ட இந்த இருவருக்கும் எதிராக நேற்று வியாழக்கிழமை பொலிசார் வழக்கு தொடர்ந்ததையடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் சிறையில் இருக்கும் இருவரையும் குறித்த வழக்கில் 27ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.