LOADING

Type to search

இலங்கை அரசியல்

மீள் குடியேற்றத்தை விரைவுபடுத்த ரணில் முன்னெடுப்பு

Share

நடராசா லோகதயாளன்.

மீள்குடியேற்ற செயற்பாடுகள் அடுத்த வருட ஆரம்பத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். இதனை தொடர்ந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தலைமையேற்று நடாத்தினார்.

இதன்போது படைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள ஆலய விடுவிப்புத் தொடர்பில் சாதமாக பதிலளிப்பதாக கடந் ஆண்டு பொங்களின்போது உறுதியளித்தபோதும. இன்றுவரை இடம்பெறவில்லையென வடக்குமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் சுட்டிக் காட்டிய விடயம் தொடர்பில் அடுத்து வரும் பாதுகாப்பு கவுண்சில் கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்வு காணுவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகள் நீண்டுச்செல்ல இடமளிக்க முடியாது என இன்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் மீள்குடியேற்ற செயற்பாடுகளும் அடுத்த வருட ஆரம்பத்துக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் , எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள் தெளிவுப்படுத்தினர். அத்துடன் வடக்கு மாகாணத்தின் நிலைமை குறித்து வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன விடயங்களை சமர்பித்தார்.

காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், மீனவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், தீவகங்களுக்கான போக்குவரத்து பிரச்சினை, வீதி சீரின்மை, இளையோருக்கான தொழில் பயிற்சியின்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்றைய விசேட கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்ட இணைத்தலைவர்களான ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோரும் அரச தரப்பில் பங்குகொண்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.