எமது தமிழ் மக்கள் 75 வருடங்களாக சிங்கள ஆட்சியாளர்களால் மாத்திரமல்ல தமிழ்தலைமைகளினாலும் ஏமாற்றப்படுவதும் வரலாறாக உள்ளது
Share
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ராஜ்குமார் கனடா உதயனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிப்பு
(வவுனியாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
”தமிழ் மக்கள் 75 வருடங்களாக ஏமாற்றப்படுவதே வரலாறாக உள்ளது. சிங்கள ஆட்சியாளா;களால் மாத்திரமல்ல தமிழ்தலைமைத்துவங்களினாலும் ஏமாற்றப்படுவதும் வரலாறாக உள்ளது என்பது கசப்பான விடயமாகும். இவ்வாறான ஏமாற்று வேலைகளுக்கு பலியானவர்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களும் உறவினர்களும் உள்ளடக்கப்படுகின்றார்கள். தமிழ் மக்கள் அனுபவித்த அந்த ஏமாற்றங்களையும் நாமும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றோம்”
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் செயலாளரான கோ. ராஜ்குமார் கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தை வவுனியாவில் உள்ள அமைப்பின் தற்காலிக பொது ஜனத் தொடர்பு அலுவலகத்தில் சந்தித்தபோது தொpவித்தார்.
கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்த ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரை சந்திக்க வேண்டும் என்று விடுத்த வேண்டுகோளையடுத்து செயலாளர் ராஜ்குமார் மற்றும் சங்கத்தின் தலைவி திருமதி காசிப்பிள்ளை ஜெயவனிதா ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.
மேற்படி சந்திப்பின் போது வலிகளும் ஏமாற்றங்களும் நிறைந்த தங்கள் அனுபவங்களை இருவரும் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டோhpன் சார்பில் நாம் உயிரைப் பணயம் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினோம். இந்தப் போராட்டத்திற்கு உள்நாட்டில் மாத்திரமல்ல உலக அளவிலும் எமக்கு ஆதரவூ கிட்டியது. இதனை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கென கொழும்பில் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென நாம் அழைக்கப்பட்டோம். எங்களுடைய குழுவில் சிரேஸ்ட சட்டத்தரணி இரட்னவேல் தலைமையிலான சட்டத்தரணிகள் அங்கம் வகித்தனர். அந்தப் பேச்சுவாh;த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அழையா விருந்தாளிகளாக வந்து அமர்ந்திருந்து எமது கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
அந்த பேச்சுவார்த்தையின் போது காணாமல் ஆக்கப்பட்டோன் அமைப்பின் சார்பில் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. காணாமல் ஆக்கப்பட்டோரை விடுதலை செய்தல்.
2. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்.
3. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல்.
இந்த மூன்று கோரிக்கைகளையூம் அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட அப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சா் ருவான் விஜேவா்தன பதினான்கு நாட்களுக்குள் தீர்வு காண்பதாக எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கினார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளும் அதே வேளையில் இந்த விவகாரத்துக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்பதே எமது இலக்காக இருந்தது.
இந்தப் பிரச்சனைக்கு அரசதரப்பில் பதினான்கு நாட்களுக்குள் தீர்வு காண்பதாக எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கியதை அடுத்து சட்டத்தரணி இரட்னவேல் தலைமையிலான சட்டத்தரணிகள் அந்தக் கூட்டத்தில் அழையா விருந்தாளியாக வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினா் வெளியேற வேண்டுமென கோரிக்கையை அரசாங்க தரப்பிரிடம் முன் வைத்தனா்.
இதனை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டோர் ; விவகாரத்துக்கான தீர்வு விடயம் கிடப்பில் போடப்பட்டு சிரேஸ்ட சட்டத்தரணி தலைமையிலான குழுவினருக்கும் அழையா விருந்தாளியாக அமா்ந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் மோதல் ஆரம்பித்தது.
அவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியூமான எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு எழுந்து நின்று கூ றினார்
” காணாமல் ஆக்கப்பட்டோம்; விவகாரம் தொடா்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே அரசாங்கத்தரப்புடன் தொடர்ச்சியாகப் பேச்சு வாா்த்தை நடத்தி வருகின்றனா். கடந்த பொதுத் தேர்தலில் பெருமளவான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினா்கள் எனக்கே வாக்களித்தனர்;. இன்றைய கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பின் சார்பில் பதினான்கு பேரே கலந்து கொண்டுள்ளனர்;.
இந்த 14 பேருக்குத் தீர்வினை வழங்குங்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்; தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை அரச தரப்புடன் தொடா்ச்சியாகப் பேசி வருகின்றனா;. அரச தரப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைத் தவிர்த்துப் பேச்சு வாh;த்தை நடத்துவதாயின் அரசாங்கத்துடனான தொடா;பை நாம் துண்டித்துக் கொள்வோம்” என்று கூறிவிட்டு வெளியேறினார்.
அவர் இவ்வாறு கூறியமை எமக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அரசாங்கத்தின் பிரதிநிதி எமக்கு வாக்குறுதிகளைத் தந்த தருணத்தில் சுமந்திரன் அவர்கள் அதை .இல்லாமல் செய்யும் காரியத்தை செய்ய முனைந்துள்ளார்;.
இந்தச் சம்பவம் காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பினருக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வினை கூட்டமைப்பினருடன்தான் பேச வேண்டும் எனக் கூறி சுமந்திரன் எம்.பி தடுத்துவிட்டார்
எத்தையோ வருடங்களாக நாம் எமது உறவுகளை இழந்தவர்களுக்காக போராடி வருகின்றோம். ஆனால் எவரை நம்புவது என்பது தொpயவில்லை. அரசாங்கம் தமது நிகழ்ச்சி நிரழ்களுக்காக தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது. தமிழ்த் தலைமைகளும் சட்டத்தரணிகளும் தமது கொழும்பு அரசியலுக்காக எங்களையூம் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்; என்றும் காணாமல் ஆக்கப்பட்டோhpன் அமைப்பின் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அப்போது உதயன் பிரதம ஆசிரியர் பின்வரும் கேள்வியை அவரிடம் முன்வைத்தார்.
கேள்வி : இந்தப் போராட்டம் வவுனியாவில் நடைபெறுகின்றது. இன்றைய நிலையில் போராட்டக்காரர்களுக்ளாகிய உங்களுக்கு எதுவும் எந்நேரத்திலும் நடக்கலாம் என்ற சூழ்நிலையே உள்ளது. மிகுந்த சவால் நிறைந்த போராட்டம். இதனை எவ்வாறு முகம் கொடுக்கின்றீர்கள்?.
பதில் : நான் சவால்கள் என்பதற்கு அப்பால் எதிர்கால நகர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டுமென்றே கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றேன்;. முட்டையை உடைத்துக் கொண்டுதான் கோழிக் குஞ்சு வெளியில் வருகின்றது. எனவே சவால்களுக்கு நாம்தான் முகம் கொடுத்தாக வேண்டும். அதாவது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளே என்றும் எங்கள் முன் நிற்கின்றதன.
கேள்வி: இலங்கை ஆட்சியாளர்களின் நல்லிணக்கம் குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்: இலங்கை அரசாங்கம் தொடா்ச்சியாக நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றது. ஒருபுறம் நல்லிணகக்கம் பேசும் இலங்கை ஆட்சியாளார்கள் மறுபுறம் தமிழர் பகுதிகளை சிங்களக் குடியேற்றங்களாலும் புத்த விகாரைகளாலும் நிரப்பி வருகின்றனா;. உண்மையில் ஒடுக்குமுறையாளாகளே நல்லிணக்கத்தை காட்ட வேண்டும். நல்லிணக்கம் என்பது தமிழ் மக்கள் 1947 ம் ஆண்டைப் போன்று இலங்கை நிலைமைக்குத் திரும்ப வேண்டும்.
கேள்வி: தமிழ்த் தலைமைகள்குறித்த தங்களது அபிப்பிராயம் என்ன?
தமிழ்த் தலைமைகள் இன்று ஒன்று நாளை ஒன்று என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனா;.நாற்பது வருடங்களுக்கு முன்னர் தமிழர் சுயாட்சிக் கழகத்தினை நிறுவி தேர்தலில் போட்டியிட்ட ஊர்காவற்றுறை நவரட்னம் அவர்களை நினைத்து அவரது மறைவு நாளைக் கொண்டாடுகின்றனர்… அன்று அவரது கொள்கை பிழை என தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ; அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூறினார். ஆனால் அவரே 1977லில் தனி நாட்டுக் கோரிக்கை; முன்வைத்து தமிழ் மக்கள் ஆணையை வேண்டி நின்றார்.. 1977 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையைத்தான் தமிழ் இளைஞர்கள் கைகளில் எடுத்தனா். இதனையே தொடர்ந்து தலைவரம் பிரபாகரன் முன்னெடுத்தார்.
எனவே எங்களுக்கு சார்பான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் தரப்பை இனம் காண்பது தற்போது கடினமாக உள்ளது. எங்களுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இது பெரும் பிரச்சனையாகவே உள்ளது.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினா; சிறீதரன் அவர்கள் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா என்பன இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமெனக் கோருகின்றார். தான் தமிழரசுக்கட்சியின் தலைவராக வரவேண்டும் என்பதற்காகக் இவ்வாறு கூறுகின்றார’ என்று பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்..
மறுபுறம் தமிழ்த் தலைமையை வைத்திருப்பதாகக் கூறும் சம்பந்தன் ஐயா ஜனாதிபதி ரணில்விக்ரம சிங்கவூடனான சந்திப்பின்போது நல்லிணக்கம் என்று ஏமாற்றாதீர்கள். நாம் சர்வதேசத்திடம் செல்வோம் என்று கூறுகின்றார். இவ்வாறாக ஒவ்வொருவரும் தங்கள் பாராளுமன்றம் நோக்கிய பார்வையை முன்வைத்தே அரசியல் செய்கின்றனர் தவிர தமிழ் மக்கள் நலன் கருதி அல்ல .
மொத்தத்தில் பார்த்தால் இன்றைய தமிழ்த் தலைமைகள் ஊடகச் செய்திகளுக்கான பரப்புரையிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்றும் ஜெயக்குமார் அவர்கள் விசனம் தெரிவித்தார்.