LOADING

Type to search

இலங்கை அரசியல்

வாகரை கயங்கேணியில் மினி சூறாவளி 6 மீன்படி படகுகள் 3 எஞ்ஜின்கள் சேதம்

Share

( கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிபடகுகள் தூக்கி வீசப்பட்டதையடுத்து 6 படகுகள் 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார்.

வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுகளை நிறுத்திவைத்திருந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு திடிரென மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து படுகுகளை தூக்கி வீசியதில் 6 படகுகள் ; 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளது .

இதேவேளை கடந்த வாரம் சீரற்ற கால நிலையால் பெய்துவந்த கடும் மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம் காரணமாக கல்லரிப்பு பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்டதையடுத்து அந்த பிரதேசத்துக்கு உழவு இயந்திரம் மற்றும் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 22 குடும்பங்கள் தொடர்ந்தும் கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தற்பேர்த வெள்ள நீர் வழிந்தோடிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.