கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் தொடர்பான ஆயத்தப் பணிக்காக கச்சதீவிற்கு சென்ற மாவட்டச் செயலக அலுவலர்கள் மற்றும் பங்குத் தந்தை
Share
கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் தொடர்பான முன் ஆயத்தப் பணிக்காக மாவட்டச் செயலகம் மற்றும் பங்குத் தந்தை ஆகியோர் கச்சதீவிற்கு சென்று ஆராய்ந்தனர்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான உற்சவம் பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி நடாத்த திட்டமிடும் நிலையிலேயே இந்த துன் ஆயத்தப் பயணம் நேற்று இடம்பெற்றது.
இவ்வாறு இடம்பெற்ற பயணத்தில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர், நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் பங்குந் தந்தை ஆகியோருடன் கடற்படையினரும் பயணித்துள்ளனர்.
15-01-2024 காலை கச்சதீவு சென்ற குழுவினர் முன்னாயத்தப்பணிகளிற்கான ஏற்பாடுகளின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் திணைக்களங்களின் வகி பாகம் என்பன தொடர்பில் எதிர்வரும் வாரம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிற்கான திட்டமிடலிற்கு தேவையான தரவுகளை சேகரிக்கும் வகையிலேயே இப் பயணம் அமைந்துள்ளது என அறியப்படுகின்றது.